Home நாடு வான் அசிசா கருத்துக்களை ஹாடி திரும்பப் பெற வேண்டும் – பிகேஆர் வலியுறுத்து

வான் அசிசா கருத்துக்களை ஹாடி திரும்பப் பெற வேண்டும் – பிகேஆர் வலியுறுத்து

522
0
SHARE
Ad

Nik-Nazmi PKR Youth Leaderகிள்ளான், செப். 8 – மந்திரி பெசார் பதவிக்கு வான் அசிசா தகுதியற்றவர், அவருக்கு அப்பதவியைவகிப்பதற்கான ஆற்றல் இல்லை என்று கூறியதை பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் திரும்பப் பெற வேண்டும் என பிகேஆர் இளைஞர் பிரிவு வலியுறுத்தி உள்ளது.

கடந்த 1998ஆம் ஆண்டிலிருந்து பிகேஆர் கட்சியை வழிநடத்திச் செல்லும் வான் அசிசா, கடந்த 2008இல் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் பொறுப்பேற்றார் என்று பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவர் நிக் நஸ்மி நிக் அகமட் குறிப்பிட்டுள்ளார்.

வான் அசிசாவை எதிர்க்கட்சித் தலைவராக அன்று ஹாடி அவாங் ஏற்றுக் கொண்டதாகக் குறிப்பிட்ட அவர். தற்போது பிகேஆர் தலைவருக்கு தலைமைத்துவத்திற்கான தகுதிகள் இல்லை என்று அவர் கூறுவது சரியல்ல என்றார்.

#TamilSchoolmychoice

“பாஸ் கட்சி கூட்டத்திலும், பின்னர் பக்காத்தான் தலைமைத்துவ மன்றத்தின் கூட்டத்திலும் டாக்டர் வான் அசிசா மந்திரி பெசார் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில், அவருக்கு அப்பதவியை வகிக்கும் தகுதியில்லை என்று ஹாடி அவாங் கூறுவது பொருத்தமற்றது,” என்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் நிக் நஸ்மி நிக் அகமட் தெரிவித்துள்ளார்.

பக்காத்தான் உச்சமன்றம் (Leadership Council) மற்றும் பாஸ் உச்சமன்றத்தின் முடிவை ஹாடி அவாங் மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், ஹாடி அவாங்கின் கருத்துக்கள் பக்காத்தான் கூட்டணிக் கட்சிகள் இடையேயான நட்பை சோதிப்பதாக அமைந்துள்ளது என்றும் கூறியுள்ளார்.

மந்திரி பெசார் பதவிக்கு டாக்டர் வான் அசிசா பொருத்தமானவர் எனத் தாம் கருதவில்லை என்று ஹாடி அவாங் அண்மையில் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.