Home நாடு பாஸ் அந்தர் பல்டி : “மந்திரி பெசார் பதவியை ஏற்க மாட்டோம்”

பாஸ் அந்தர் பல்டி : “மந்திரி பெசார் பதவியை ஏற்க மாட்டோம்”

573
0
SHARE
Ad

Mohd Sabu PAS Deputy President கோலாலம்பூர், செப். 8 – சிலாங்கூர் மந்திரி பெசார் விவகாரம் தொடர்பான சர்ச்சை அடுத்தடுத்து பல்வேறு திருப்பங்களைக் கண்டு வருகிறது.

இந்நிலையில், பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங் பரிந்துரைத்த மூவரில் ஒருவரை சிலாங்கூர் சுல்தான் தேர்வு செய்தாலும் கூட, மந்திரி பெசார் பதவியை ஏற்கப் போவதில்லை என பாஸ் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அக்கட்சியின் மத்திய செயலவை கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஸ் துணைத் தலைவர் முகமட் சாபு, மந்திரி பெசார் பதவியை ஏற்பதில்லை என்று முன்பு மத்திய செயலவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவில் உறுதியாக இருப்பதாகத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மந்திரி பெசார் பதவி வகிக்க டத்தோஸ்ரீ வான் அசிசாவுக்கு தகுதியில்லை எனக் கூறியுள்ள பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ ஹாடி அவாங், அப்பதவிக்கு பாஸ் சார்பில் மூன்று பெயர்களை பரிந்துரைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

கட்சி சட்டவிதிகளின்படி குறிப்பிட்ட சில முடிவுகளை எடுக்க தமக்குஅதிகாரம் உள்ளதாக கடந்த சனிக்கிழமை அவர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை சுமார் 5 மணி நேரம் நீடித்த மத்திய செயலவைக் கூட்டத்தில் ஹாடி அவாங் பங்கேற்கவில்லை.

இதற்கிடையே அரண்மனை கேட்டுக் கொண்டபடி, இரண்டுக்கும் மேற்பட்ட பெயர்களை மந்திரி பெசார் பதவிக்கு பரிந்துரைத்ததால் எந்தப் பாதகமும் ஏற்பட்டுவிடாது என பாஸ் தலைமைச் செயலாளர் டத்தோ முஸ்தபா அலி தெரிவித்தார்.

“இது வெறும் பரிந்துரை மட்டுமே… இறுதியில் முடிவெடுக்கப் போவது சுல்தான் தான்,” என்றார் முஸ்தபா.

டான்ஸ்ரீ காலிட் வகித்த முதல்வர் பதவியை ஏற்கும்படி கேட்டு, அரண்மனையில் இருந்து ஏதேனும் தகவல் வந்ததா? என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், அரண்மனை என்ன முடிவெடுக்கும் என்பது குறித்து முன்கூட்டியே கருத்து தெரிவிக்கக் கூடாது என்றார்.