Home நாடு ‘கித்தா லாவான்’ பேரணி தொடர்பில் நிக் நஸ்மி அகமட் கைது!

‘கித்தா லாவான்’ பேரணி தொடர்பில் நிக் நஸ்மி அகமட் கைது!

570
0
SHARE
Ad

1a5647cdf48ed1a4293cb93ed38257b1

கோலாலம்பூர், மார்ச் 9 – கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ‘கித்தா லாவான்’ பேரணி குறித்த விசாரணைக்காக, பிகேஆர் இளைஞர் பிரிவுத் தலைவரும், சிலாங்கூர் ஆட்சிக்குழு உறுப்பினருமான நிக் நஸ்மி நிக் அகமட் 3 நாட்கள் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து நிக் நஸ்மி இன்று தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலில்,“அமைதியாக நடைபெற்ற அந்த பேரணிக்காக நான் மூன்று நாட்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், “சட்டப்படி அமைதியான முறையில் பேரணி நடத்த அரசியலமைப்பில் இடமிருந்தாலும், அதிகாரிகள் அதை காலால் நசுக்கிவிட்டனர்” என்றும் நிக் நஸ்மி குறிப்பிட்டுள்ளார்.

நேற்று நடைபெற்ற ‘கித்தா லாவான்’ பேரணி பற்றி வாக்குமூலம் அளிக்க டாங்  வாங்கி காவல்நிலையத்திற்கு சென்ற நிக்  நஸ்மி, அமைதிப்  பேரணிச்  சட்டம்  மற்றும்  குற்றவியல்  சட்டம்  பகுதி  143   ஆகியவற்றின் கீழ் கைது செய்யப்பட்டார் என்று கூறப்படுகின்றது.