கோலாலம்பூர், மார்ச் 25 – கடந்த மார்ச் 7-ம் தேதி, நடத்தப்பட்ட ‘கித்தா லவான்’ பேரணியை விட, மிகப் பெரிய பேரணியை வரும் மார்ச் 28-ம் தேதி சனிக்கிழமை நடத்த திட்டமிட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
‘சோகோ’ வணிக வளாகத்தில் இருந்து தொடங்கும் பேரணி, பிரதமர் நஜிப் துன் ரசாக்கின் மகள் திருமண வரவேற்பு நடைபெறும் கேஎல்சிசி கட்டிடம் வரை நடைபெறும் என்றும் பிகேஆர் தலைமைத்துவக்குழுவின் உறுப்பினரான ஃபாரிஸ் மூசா கூறினார்.
“கேஎல்சிசி சென்று நஜிப்பின் மகள் திருமண வரவேற்ப்பில் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளோம். ஆனால் நிச்சயம் அதற்கு பல தடைகள் இருக்கும்” என்று ஃபாரிஸ் மூசா கூறியுள்ளார்.
கடந்த மார்ச் 7-ம் தேதி, நடத்தப்பட்ட ‘கிட்ட லவான்’ பேரணியில் சுமார் 10,000 பேர் கலந்து கொண்டனர். ஆனால் இப்பேரணி அதைவிட அதிகமானோர் கலந்து கொள்ளும் பேரணியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இம்முறை அன்வார் இப்ராகிமின் விடுதலைக்காக மட்டுமின்றி, ஜிஎஸ்டி (பொருட்கள் மற்றும் சேவை வரியை) எதிர்த்தும் பேரணி நடைபெறவுள்ளது.