Home நாடு காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய 11 மலேசிய மாணவர்கள் மீட்பு!

காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய 11 மலேசிய மாணவர்கள் மீட்பு!

481
0
SHARE
Ad

kashmir,

புதுடெல்லி, செப்டம்பர் 10 – இந்தியாவில் வட மாநிலமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் வெள்ளத்தில் சிக்கிய 56 மலேசியர்களில் 11 மாணவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நேற்று மாலை புதுடெல்லி அழைத்து வரப்பட்டனர்.

மீதமுள்ள 43 பேரில் 26 பேர் மாணவர்களாவர். அவர்கள் அம்மாநிலத்திலியே பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

#TamilSchoolmychoice

சென்னையிலுள்ள மலேசியா தூதரகத்தின் தலைவர் சித்ரா தேவி, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்து ஆலோசித்து அவர்கள் அனைவரையும் வெள்ளப்பகுதியில் இருந்து மீட்டு வர நடவடிக்கை எடுத்து வருகின்றார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை கொட்டியது. இதனால் மாநிலத்தின் அனைத்து நதியிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இதனால் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் சிக்கி இன்னும் 4 லட்சம் மக்கள் தவித்து வருகின்றனர். மழை வெள்ளம் படிப்படியாக குறைந்தாலும், பல இடங்களில் பல அடி உயரத்துக்கு மழைநீர் தேங்கி நிற்பதால் மீட்புப் பணிகள் மேற்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

இதுவரை 43,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.