Home உலகம் காஷ்மீர் பாகிஸ்தானுக்குரியது: பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ! 

காஷ்மீர் பாகிஸ்தானுக்குரியது: பாகிஸ்தான் மக்கள் கட்சித் தலைவர் பிலாவல் புட்டோ! 

814
0
SHARE
Ad

bilawal_bhuttoபஞ்சாப், செப்டம்பர் 22 – காஷ்மீர், பாகிஸ்தானுக்கே சொந்தமானது, அதனை பாகிஸ்தானுடன் இணைக்காமல் ஓய மாட்டேன் என்று பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவர் பிலாவல் புட்டோ பொதுக் கூட்டம் ஒன்றில் கூறியிருப்பது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தானில், கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற கட்சிக் கூட்டம் ஒன்றில் பிலாவல் உரையாற்றும் போது கூறியதாவது:-

“காஷ்மீர் முழுவதும் பாகிஸ்தானிற்கு சொந்தமானது. அதனை திரும்பக் கைப்பற்றுவேன். காஷ்மீரின் ஓர் அங்குலப் பகுதியைக் கூட இந்தியாவிற்கு விட்டுத்தர மாட்டேன்” என்று கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர்கள் யூசுப் ரஸா கிலானி, ராஜா பர்வேஸ் அஷ்ரஃப் ஆகியோரும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் மக்கள் கட்சியின் தலைவரான பிலாவல் புட்டோ, பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரான மறைந்த பெனாசிர் அலி புட்டோவின் மகன் என்பதும், அவரது தந்தை ஆசிஃப் அலி சர்தாரியும், பாகிஸ்தானின் அதிபராக 2008-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை பதவி வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

india.kashmir.delhi.lgஇந்தியாவுடன் தொடர்ந்து நல்லுறவு வைத்துக் கொண்டிருக்கும் பாகிஸ்தான் மக்கள் கட்சியைச் சேர்ந்த முக்கியத் தலைவர் ஒருவரின் இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள இந்தியா, பிலாவலின் பேச்சு சிறுபிள்ளைத் தனமானது அதனை பொருட்படுத்த வேண்டாம் என்றும் கூறியுள்ளது.