சென்னை, அக்டோபர் 1 – சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் நேற்று ஈடுபட்டுள்ளனர்.
இதில் தற்போது வரை விக்ரம், சூர்யா, விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன், கார்த்தி, இயக்குனர் பாலா,விமல் போன்றோர் கலந்து கொண்டனர்.
ஆனால் அனைவரும் எதிர்பார்த்த கோலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான ரஜினி, கமல், விஜய், அஜித்,சிம்பு, தனுஷ் போன்றோர் இறுதி வரை கலந்துகொள்ள வில்லையாம்.
#TamilSchoolmychoice
இதில் ரஜினி, அஜித், விஜய் படப்பிடிப்பிற்காக வெளியூரில் உள்ளனராம். ஆனால், கமல் மட்டும் சென்னையில் தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.