ரோம், பிப்.25- இத்தாலி நாட்டில், சட்ட மன்ற தேர்தல் நடக்கிறது. ஐரோப்பிய நாடான இத்தாலியிலும், கடும் பொருளாதார நெருக்கடி காணப்படுகிறது.
வேலை வாய்ப்பின்மை, சிக்கன நடவடிக்கைகளால், மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.
இத்தாலி சட்டமன்ற, 630 இடங்களுக்கான தேர்தல், நேற்றும், இன்றும் நடக்கிறது.
இந்த தேர்தலில், முன்னாள் அதிபர் சில்வியோ பெர்லுஸ்கோனி, தற்போதைய இடைக்கால பிரதமர் மரியோ மோன்டி, சிரிப்பு நடிகர் பெப்பி கிரில்லோ, ஜனநாயக கட்சி தலைவர் லுய்கி பெர்சானி உள்ளிட்ட, ஐந்து பேர், களத்தில் உள்ளனர்.
பொருளாதார சீர்திருத்தங்களை செய்யவல்ல, ஜனநாயக கட்சி தலைவர் பெர்சானிக்கு, வெற்றி வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக, கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன. தேர்தல் முடிவுகள் நாளை வெளிவர உள்ளது.