Home உலகம் சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:300 பேர் படுகாயம்,50 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

சீனாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்:300 பேர் படுகாயம்,50 ஆயிரம் பேர் வெளியேற்றம்!

813
0
SHARE
Ad

chinaபீஜிங், அக்டோபர் 9 – சீனாவின் தென்மேற்கு மலைப்பகுதியான யூனான் பிராந்தியத்தில் நேற்று மாலை கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் 300 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் அப்பகுதியில் வசித்த 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர்.

சீனாவின் தென்மேற்கே மியான்மர் மற்றும் லாவோஸ் எல்லையில், யூனான் பிராந்தியத்தில் ஏராளமான மலைத்தொடர்கள் உள்ளன. நேற்று மாலை 6 மணியளவில் இந்த பிராந்தியத்தில் 6.6 ரிக்டர் அளவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.

china_ap_2143726fஇதைத் தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த ஏராளமான வீடுகள் அதிர்ந்து குலுங்கின. பல வீடுகள் இடிந்து விழுந்தன. மலைப்பகுதியில் இருந்து ஏராளமான பாறைகள் வீடுகளின் மேல் உருண்டு விழுந்தன. இதில் ஒருவர் பலியானார். மேலும் 324 பேர் பாறை இடுக்குகளில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.

#TamilSchoolmychoice

இதுகுறித்து தகவல் அறிந்ததும் 3,200 ராணுவத்தினரும் 600 அதிரடி மீட்பு குழுவினர் மோப்ப நாய்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு அவர்கள் இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில்  ஈடுபட்டு வருகின்றனர்.

CHINA-QUAKEவீடுகளை இழந்து பரிதவித்து கொண்டிருந்த 50 ஆயிரம் பேரை ராணுவத்தினர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றினர். தற்போதும் அப்பிராந்தியத்தின் ஒருசில பகுதிகளில் தொடர்ந்து நில அதிர்வுகள் காணப்படுகின்றன. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட கட்டிட மற்றும் உயிர் சேதங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.