Home கலை உலகம் மலேசியக் கலையுலகம்: ‘கைதியின் அகராதி’ திரைப்படம் இன்று நாடெங்கிலும் வெளியாகிறது!

மலேசியக் கலையுலகம்: ‘கைதியின் அகராதி’ திரைப்படம் இன்று நாடெங்கிலும் வெளியாகிறது!

585
0
SHARE
Ad

Kaithiyin Agarathiகோலாலம்பூர், அக்டோபர் 9 – அஞ்சனா ஃபிலிம்ஸ் தயாரிப்பில், சீனு இயக்கத்தில் காந்திபன், அகோந்தரன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள புதிய மலேசியத் திரைப்படம் ‘கைதியின் அகராதி’.

இன்று மலேசியா முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியிடப்படவுள்ளது.

சந்தர்ப்ப சூழ்நிலையால் சிறையில் அடைக்கப்படும் வாலிபர் ஒருவரின் வாழ்க்கையை மையமாக வைத்து, மிகவும் உருக்கமான கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் நிச்சயம் மக்கள் அனைவரும் கவரும் என இயக்குநர் சீனு தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மேலும், இந்த திரைப்படத்தின் முடிவு இதுவரை வேறு எந்த படத்திலும் காட்டாத வகையில் புதுமையாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திரைப்படத்திற்கு நாகேன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஷமன் இசையமைத்துள்ளார்.

‘கைதியின் அகராதி’ திரைப்படத்தின் முன்னோட்டம்: