Home நாடு புக்கிட் பிந்தாங்கில் குண்டு வெடிப்பு! 14 பேர் காயம்!

புக்கிட் பிந்தாங்கில் குண்டு வெடிப்பு! 14 பேர் காயம்!

702
0
SHARE
Ad

Bukit09101401eகோலாலம்பூர், அக்டோபர் 9 – தலைநகர் ஜாலான் புக்கிட் பிந்தாங்கில் உள்ள  சன் வளாகத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில், கிரானைட் வகை கையெறி குண்டு ஒன்று வெடித்ததில், இரண்டு பெண்கள் உட்பட சுமார் 14 பேர் காயமடைந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், அங்கு மதுபான விடுதி ஒன்றின் வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 4 கார்கள் சேதமடைந்ததாக காவல்துறை அறிவித்துள்ளது.

அந்தப் பகுதியிலுள்ள கட்டிடம் ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து வீசப்பட்ட இரண்டு கையெறி குண்டுகளில் ஒன்று வெடித்தது என்றும், மற்றொன்று செயலிழந்தது என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.

#TamilSchoolmychoice

காயமடைந்தவர்கள் கோலாலம்பூர் பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதில் ஒருவர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.