Home நாடு புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு: குண்டர் கும்பல் 21ன் தலைவனுக்கு வலை வீச்சு

புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்பு: குண்டர் கும்பல் 21ன் தலைவனுக்கு வலை வீச்சு

675
0
SHARE
Ad
Sun-Complex-Bukit-Bintang-

கோலாலம்பூர், அக்டோபர் 13 – புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்புச் சம்பவத்தையடுத்து குண்டர் கும்பல் 21ன் தலைவனை குறி வைத்து 6 இரவு நேர கேளிக்கை விடுதிகளில் காவல் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

கடந்த வியாழக்கிழமை குண்டு வெடிப்பு நிகழ்ந்த சன் வளாகத்திலேயே இந்த 6 விடுதிகளும் உள்ளன. இச்சோதனை நடவடிக்கை சனிக்கிழமை இரவு 11 மணிக்குத் தொடங்கி ஞாயிற்றுக்கிழமை காலை 5 மணி வரை நீடித்ததாக நகர குற்றவியல் புலனாய்வுப் பிரிவு (சிஐடி) பிரிவு மூத்த உதவி ஆணையர் கேன் கோங் மெங் தெரிவித்தார்.

“நாங்கள் 3 விடுதிகளில் சோதனை மேற்கொண்டு 405 பேரை விசாரித்தோம். இதையடுத்து அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறி இரவு விடுதியை திறந்து வைத்திருந்தது, குறைந்த வயதுடையவர்களை விடுதிக்குள் அனுமதித்தது ஆகிய குற்றச்சாட்டின் பேரில் இருவரைக் கைது செய்துள்ளோம்” என்றும் அவர் மேலும் கூறினார்.

#TamilSchoolmychoice

“சிறப்புப் படையினர் உள்ளிட்ட புக்கிட் அம்மானைச் சேர்ந்தவர்கள் மேலும் 3 விடுதிகளில் சோதனை நடத்தி 215 பேரிடம் விசாரணை நடத்தினர். இச்சமயம் 3 வியட்னாமிய பெண்கள் மீட்கப்பட்டனர். இவர்கள் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப் பட்டிருந்ததாக நம்புகிறோம்,” என்றார் கேன் கோங் மெங்.

குண்டர் கும்பல் எண் 21ன் தலைவன் என்று கருதப்படும் ‘ஆஹ் ஹாய்’ என்ற 53 வயதான நபரை குறி வைத்தே புக்கிட் பிந்தாங் குண்டு வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்திருப்பதாக காவல்துறை அறிவித்துள்ளது.