Home இந்தியா ‘ஹுட் ஹுட்’ புயல் – 6 பேர் பலி – ரூ.2 ஆயிரம் கோடி சேதம் –...

‘ஹுட் ஹுட்’ புயல் – 6 பேர் பலி – ரூ.2 ஆயிரம் கோடி சேதம் – விசாகப்பட்டினம் மோசமான பாதிப்பு

689
0
SHARE
Ad

Hud Hud Cycloneவிசாகப்பட்டினம், அக்டோபர்  13 – ‘ஹுட் ஹுட்’ புயல் ஞாயிற்றுக்கிழமை மதியம் விசாகப்பட்டினம் அருகே கரையைக் கடந்தது. அப்போது உச்சபட்சமாக மணிக்கு 205 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த புயல் காற்று தாக்கியது.

புயல் சீற்றம் காரணமாக பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. இத்தகைய சம்பவங்களால் இதுவரை 6 பேர் வரை பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புயல் கரையைக் கடந்தபோது வீசிய காற்றில் ஏராளமான தொலைபேசி, மின் கம்பங்கள் மற்றும் போக்குவரத்து சமிக்ஞை கம்பங்கள் சாய்ந்தன. சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனங்கள் காற்றில் தூக்கி வீசப்பட்டன.

#TamilSchoolmychoice

புயல் காரணமாக ஆந்திர மாநிலத்தின் 5 மாவட்டங்கள் மிக மோசமான சேதங்களைச் சந்தித்துள்ளன. வெள்ள நிவாரணப் பணிகளை மேற்கொள்ள ரூ.2 ஆயிரம் கோடியை மத்திய அரசு ஆந்திராவுக்கு வழங்க வேண்டும் என அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு கோரிக்கை விடுத்துள்ளார்.

புயல் கரையைக் கடந்து விட்டாலும் அதன் பாதிப்பு அடுத்த 6 மணி நேரங்களுக்கு நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முன்னதாக ஹுட் ஹுட் புயலால் ஆந்திராவுக்கான பல்வேறு விமான சேவைகள் நிறுத்தப்பட்டன. மேலும் விசாகப்பட்டினத்தில் இருந்து பிற பகுதிகளுக்குச் செல்லவிருந்த ரயில் சேவைகள் பலவும் ரத்து செய்யப்பட்டன.