Home இந்தியா ஹூட் ஹூட் புயல் வீசியபோது ஒடிசாவில் 245 குழந்தைகள் பிறந்தன!

ஹூட் ஹூட் புயல் வீசியபோது ஒடிசாவில் 245 குழந்தைகள் பிறந்தன!

661
0
SHARE
Ad

Tamil_News_576331734658புவனேஸ்வர், அக்டோபர் 15 – அந்தமான் அருகே வங்கக்கடலில் உருவான ஹூட்  ஹூட் புயல் கடந்த 12-ம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் –  ஒடிசா மாநிலம் கோபால்பூர் இடையே கரையை கடந்தது.

ஒடிசா  மாநிலத்தின் 8 தென் மாவட்டங்கள் புயலால் கடுமையாக  பாதிக்கப்பட்டன. புயல் கரையை கடந்த தினத்தன்று இந்த  மாவட்டங்களில் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த 397  கர்ப்பிணிகளில் 245 பெண்களுக்கு குழந்தைகள் பிறந்தன.

அக்டோபர் 12-ம் தேதி கஜபதி, கோராபுட், மால்கான்கிரி, ராயாகடா,  நபராங்பூர், கஞ்சம் மற்றும் காலஹண்டி ஆகிய மாவட்டங்களில் உள்ள  அரசு மருத்துவமனைகளில் இந்த 245 குழந்தைகள் பிறந்ததாக  சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தாயும் குழந்தைகளும்  நலமாக இருப்பதாகவும் கூறினர்.