Home கலை உலகம் ஹூட் ஹூட் புயலுக்கு நடிகை சமந்தா ரூ.10 லட்சம் நிதியுதவி!

ஹூட் ஹூட் புயலுக்கு நடிகை சமந்தா ரூ.10 லட்சம் நிதியுதவி!

763
0
SHARE
Ad

Samanthaஐதராபாத், நவம்பர் 24 – ஆந்திரா முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்த நடிகை சமந்தா ஹூட் ஹூட் புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கினார்.

ஆந்திர மாநிலத்தை கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஹூட் ஹூட் புயல் தாக்கியது. இதில் கடலோர ஆந்திராவில் உள்ள விசாகப்பட்டினம், விஜயநகரம், ஸ்ரீகாகுளம் ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன.

விசாகப்பட்டினம் பெருமளவில் சேதமடைந்தது. இதில் 50 பேர் பலியானார்கள், பல ஆயிரக்கணக்கானோர் இருப்பிடங்களை இழந்தனர். பல கோடி மதிப்பிலான பயிர்கள் சேதமடைந்தன.

#TamilSchoolmychoice

ஹூட் ஹூட் புயலுக்காக நடிகர் சூர்யா, கார்த்திக், விஷால் உட்பட பல திரைப்பட நடிகர்கள், நடிகைகள், தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், தொழிலதிபர்கள் நிதியுதவி வழங்கினர்.

இதற்கு நடிகை சமந்தாவும் ரூ. 10 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில் நேற்று காலை ஐதராபாத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சமந்தா சந்தித்தார். அப்போது ரூ. 10 லட்சத்திற்கான காசோலையை அவர் ஆந்திர முதல்வரிடம் வழங்கினார்.