Home உலகம் சுற்றுச்சூழலை பாதுகாக்க சீனாவில் 10,000 தொழிற்சாலைகள் மூடல்!

சுற்றுச்சூழலை பாதுகாக்க சீனாவில் 10,000 தொழிற்சாலைகள் மூடல்!

542
0
SHARE
Ad

china_and_us_flagபெய்ஜிங், நவம்பர் 24 – சுற்றுச்சூழலை பாதுகாக்க சீனாவில் 10,000 தொழிற்சாலைகளை மூட சீன அரசு உத்தரவிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

சமீபத்தில் பெய்ஜிங்கில் நடைபெற்ற ஆசிய-பசிபிக் பொருளாதார மாநாட்டில் சுற்றுச்சூழலை பாதுகாக்க சீனா மற்றும் அமெரிக்கா இடையே முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. இதன் மூலம் இரு நாடுகளும் சுற்றுச்சூழல் பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்து இருந்தன.

மேலும் அந்த மாநாட்டில் வளர்ந்த நாடுகள் சுற்றுச்சூழலை தூய்மையாக வைக்கும் வகையில் செயல்பட வேண்டும் என்றும், அவை வளரும் நாடுகளுக்கு உதவ வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இதனை நடைமுறைக்கு கொண்டுவரும் முனைப்பில்  அங்கு பல்வேறு கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சீன அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இது தொடர்பாக, சீன சுற்றுச்சூழல் துறையின் நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “அனைத்துலக மாநாட்டை ஒட்டி, சீனாவில் சுற்றுச்சூழல் தூய்மையை உறுதி செய்யும் நடவடிக்கைகளை அதிபர் ஜிங்பிங் நேரடியாக பார்வையிட்டார்.

“மேலும் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பாக, 4 லட்சத்து 34 ஆயிரம் பேர் சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணிகளைக் கண்காணித்தனர். 60,100 ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டது. இதில் மாசு ஏற்படுத்தும் 10 ஆயிரம் ஆலைகளை மூட ஜிங்பிங் உத்தரவிட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிய அளவில் அதிக சுற்றுச்சூழல் மாசினை ஏற்படுத்தும் நாடுகளாக அறிவிக்கப்பட்ட இந்தியாவும், சீனாவும் கடந்த சில மாதங்களாக சுற்றுச் சூழல் பாதுகாப்பில் அதிக அக்கறை காட்டுவது குறிப்பிடத்தக்கது.