Home இந்தியா சிறையில் ஜெயலலிதாவிற்கு காய்கறி நறுக்குவது, ஊதுபத்தி தயாரிக்கும் வேலையா?

சிறையில் ஜெயலலிதாவிற்கு காய்கறி நறுக்குவது, ஊதுபத்தி தயாரிக்கும் வேலையா?

644
0
SHARE
Ad

jayalalithaபெங்களூர், அக்டோபர் 13 – சிறை விதிமுறைப்படி ஜெயலலிதாவுக்கு ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற வேலைகள் ஒதுக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சிறையில் அடைக்கப்பட்டு இன்றுடன் 17 நாட்களாகின்றன. பொதுவாக தண்டனை கைதி ஒருவர், சிறையில் அடைக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அவருக்கு ஏதாவது வேலை கொடுக்க வேண்டும் என்பது விதிமுறை.

இதன்படி ஜெயலலிதா, சசிகலா, இளவரசிக்கு ஊதுபத்தி உருட்டுவது, காய்கறி நறுக்குவது போன்ற வேலை ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆனால் இவையெல்லாம் ஆவணத்தில் பராமரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட வேலைகள்தானாம்.

#TamilSchoolmychoice

ஜெயலலிதாவின் செல்வாக்கை கருத்தில்கொண்டு, அவருக்கும், சசிகலா உள்ளிட்ட தோழிகளுக்கும் இந்த வேலைகளை செய்ய சிறை நிர்வாகம் அனுமதிக்கவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் செய்து தருமாறு கர்நாடக முதல்வர் சித்தராமையா சிறைத்துறைக்கு உத்தரவிட்டுள்ளதால் இதுபோன்ற சலுகைகளை ஜெயலலிதா உள்ளிட்டோர் அனுபவிப்பதாக தெரியவந்துள்ளது.