Home வாழ் நலம் புற்றுநோயை தடுக்கும் எலுமிச்சை!

புற்றுநோயை தடுக்கும் எலுமிச்சை!

625
0
SHARE
Ad

lemon1அக்டோபர் 13 – எலுமிச்சையின் மருத்துவ குணங்கள் ஏராளம், அவற்றில் சில:-

* எலுமிச்சை விட்டமின் சி சத்து நிறைந்துள்ளதால் ரத்த சோகையை குணப்படுத்தும்.

* வயிற்றிலுள்ள வாயுவைப் போக்கி சீரண உறுப்புகளை பலப்படுத்தக் கூடியதாகும்.

#TamilSchoolmychoice

* ஒவ்வாமையால் வரும் நோய்களைத் தடுக்க கூடியது.

* தொற்று நோய்க் கிருமிகளை அழிக்க வல்லது.

* இருமல், சளி, காய்ச்சல், பித்த சம்பந்தமான நோய்கள் எலுமிச்சையால் விலகும்.

lemonjuice* எலுமிச்சை சாற்றை மேல் பூச்சாகப் பூச தேமல் தொழு நோய் வெண்ம நிறத்தோல் ஆகியன குணமாகும்.

* எலுமிச்சையின் இலைகளும், காம்புகளும் தொற்று நோய்க் கிருமிகளைப் போக்க வல்லது.

* 100கிராம் எலுமிச்சம் பழச்சாற்றில் 4 முதல் 50மி.கி வரையிலான விட்டமின் சி சத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

* எலுமிச்சையில் உள்ள “பைப்ளேவனாய்ட்” என்னும் சத்து ரத்த நாளங்களின் உட்சுவர்ப் பகுதியை பலப்படுத்துகிறது. ஈரல் வயிறு, குடல் பகுதிகளில் ஏற்படும் நோய்த் தொற்றினைப் போக்க வல்லது.

*  பழச்சாற்றுடன் போதிய தேன் கலந்து பருகி வந்தால் உற்சாகத்தை தருவதோடு உடலிலுள்ள அனைத்து தாதுக்களும் பலம் பெறுகின்றன.

* எலுமிச்சை சாறு பருகுவதால் மார்பகப் புற்று நோயை உண்டாக்கும் செல்கள் பரவுவது தடுக்கப்படுவதோடு, புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

lemon_002* சிறுநீரகக் கற்கள் உருவாவதை எலுமிச்சை தடுக்கிறது. அன்றாடம் எலுமிச்சை சாறு பருகுவதால் “யூரினரி சிட்ரேட்” என்னும் தாதுப் பொருள் உற்பத்தியாகி சிறுநீரில் படிகங்கள் உருவாகி அவை பின்னர் சிறுநீரகக் கற்களாக மாறுவதைத் தடுக்கிறது.

* எலுமிச்சைசாறு நுண் கிருமிகளை விரட்ட வல்லது. துர்நாற்றத்தை நீக்கக் கூடியது.

* தொண்டைக்கட்டு ஏற்பட்ட போது அல்லது தொண்டையில் தொற்று நோய் கண்ட போது உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பது வழக்கம். அதற்குப் பதிலாக எலுமிச்சை சாற்றை சிறிது நீரில் கலந்து வாய் கொப்பளிப்பதால் விரைவில் குணம் தெரியும்.

* எலுமிச்சை சாற்றை சிறிது நேரம் வாயில் அடக்கி வைப்பதால் பல்வலி போவதோடு ஈறுகளினின் ரத்தம் கசிவது நிற்கும்.