Home கலை உலகம் மலேசியக் கலையுலகம்: “டேவிட்” – குறும்படம் 17-ம் தேதி வெளியாகிறது!

மலேசியக் கலையுலகம்: “டேவிட்” – குறும்படம் 17-ம் தேதி வெளியாகிறது!

583
0
SHARE
Ad

கோலாலம்பூர், அக்டோபர் 13 – கிரேசி ஹவுஸ் தயாரிப்பில் முற்றிலும் இளைஞர்களின் பங்களிப்பில் உருவாக்கப்பட்டுள்ள, “டேவிட்” குறும்படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் எதிர்வரும் அக்டோபர் 17 -ம் தேதி வெளியிடப்படவுள்ளது.

பிரவின் செல்வன் இயக்கியுள்ள இந்த குறும்படத்திற்கு, ஷா ஜோவ்வின் மனதை வருடும் பின்னணி இசை மற்றும் நிரோஜ் சங்கரின் துல்லிய ஒளிப்பதிவு ஆகியவை இந்த குறும்படம் வெளி வருவதற்கு முன்பே அதன் முன்னோட்டத்திலேயே அனைவரும் கவர்ந்தது.

இந்நிலையில், இந்த குறும்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியிடப் போவதாக படக்குழுவினர் தங்களது பேஸ்புக் இணையப் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

“டேவிட்” குறும்படத்தின் அதிகாரப்பூர்வ முன்னோட்டத்தை இங்கே காணலாம்:-