கோலாலம்பூர், அக்டோபர் 13 – நவீன தொழில்நுட்பங்களில் வளர்ச்சியினால் தமிழகத்தையும் தாண்டி இன்று உலக அளவில் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்களின் உருவாக்கத்தில் மிகச் சிறந்த குறும்படங்கள் வெளிவரத் தொடங்கியுள்ளன.
யூடியூப், பேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களின் உதவியுடன் அத்தைய குறும்படங்கள் உலகிலுள்ள அனைத்து மக்களையும் சென்றடைகின்றன.
அந்த வகையில், இலங்கையைச் சேர்ந்த இயக்குநர் ஜே தாஸ்ரிக் இயக்கத்தில், தமிழ்மிரர் இணைய செய்தி நிறுவனத்தின் எடிட்டர் ஏ.பி.மதன் முக்கியக் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள ‘ஆர்முடுகல்’ என்ற குறும்படம் கடந்த வாரம் யுடியூப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
‘ஆர்முடுகல்’ என்றால் சீரான வேகம் (Accelerator) என்று பொருள். காதலர்களுக்குள் ஏற்படும் சிறு மனக்கசப்பும், அதனால் ஏற்படும் விளைவையும் மையக்கருத்தாக வைத்து இன்றைய இளைஞர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இந்த குறும்படத்தின் கதை அமைந்துள்ளது.
உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த குறும்படத்திற்கு தயாரிப்பு -எஸ்.நவா, ஒளிப்பதிவு – ஆர்.பிரகாஷ், படத்தொகுப்பு – சுரேஷ் நரேன், பின்னணி இசை – ராகேஷ் ஆகியோர் பணியாற்றியுள்ளனர்.
‘ஆர்முடுகல்’ குறும்படத்தை கீழ்காணும் யுடியூப் இணைப்பின் வழியாகக் காணலாம்:-
https://www.youtube.com/watch?v=SRQcUQtwB-0