Home கலை உலகம் நவம்பர் 9-ல் ரஜினியின் ‘லிங்கா’ இசை வெளியீடு!

நவம்பர் 9-ல் ரஜினியின் ‘லிங்கா’ இசை வெளியீடு!

484
0
SHARE
Ad

lingaa_audio_launchசென்னை, அக்டோபர் 31 – கே.எஸ்.ரவிகுமார், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணியில் உருவாகி வரும் படம் ‘லிங்கா’. இப்படத்தில் ரஜினிகாந்த் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். சோனாக்ஷி சின்ஹா, அனுஷ்கா என இரண்டு நாயகிகள்.

‘லிங்கா’ படத்தின் இசை வெளியீடு நவம்பர் 9-ல் நடக்கிறது. ரஜினி பிறந்தநாளான டிசம்பர் 12-ல் ‘லிங்கா’ படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார் கே.எஸ்.ரவிகுமார்.

படத்தின் அறிமுகப் பாடலுக்காக சீனாவின் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான மகாவ்விலும் மற்றும் இப்பாடலுக்கான இதர காட்சிகளை அபுதாபி, துபாய் ஆகிய இடங்களில் உள்ள வரலாற்று பிரசித்தி பெற்ற பகுதிகளிலும் படமாக்க உள்ளனர்.

#TamilSchoolmychoice

linga,இதை முடித்துவிட்டு விரைவில் இந்தியா திரும்பும் படக்குழு இசை வெளியீடு மற்றும் முன்னோட்ட வெளியீட்டுப் பணிகளைப் துவக்க உள்ளனர் என சினிமா வட்டாரங்கள் தெரிவித்தனர்.