Home நாடு சபாவில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையர்களுக்கு சுலு படையுடன் தொடர்பா? – காவல்துறை விசாரணை

சபாவில் சுட்டுக் கொல்லப்பட்ட கொள்ளையர்களுக்கு சுலு படையுடன் தொடர்பா? – காவல்துறை விசாரணை

714
0
SHARE
Ad
penampang (1)

கோத்தகினபாலு, அக்டோபர் 31 – சபா மாநிலம் பெனாம்பங்கில் காவல்துறைக்கும், கொள்ளையர்களுக்கும் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரு கொள்ளையர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இதனால் நேற்று அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் நிலவியது. இதையடுத்து

இந்த துப்பாக்கி சுட்டு சம்பவம் நடப்பதற்கு முன் அங்கு குறிப்பிட்ட 4 பகுதிகளில் உள்ள கடைகளை அடைக்குமாறு போலீசார் உத்தரவிட்டனர்.

#TamilSchoolmychoice

குறிப்பிட்ட 4 பகுதிகளின் மையத்தில் அமைந்துள்ள ஒரு சில கடைகளில் கவனம் செலுத்த விரும்பிய காவல்துறையினர் கடைகளை மூடுமாறு கடைக்காரர்களுக்கு உத்தரவிட்டதாகத் தெரிகிறது.மேலும் அப்பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த கார்களை அகற்றுமாறு அவற்றின் உரிமையாளர்களும் கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

இதையடுத்து அந்தப் பகுதியில் நேற்று மாலை 4 மணி அளவில் துப்பாக்கிச்சூடு நடந்தது என்று சிலர் தெரிவித்தனர்.

இதற்கிடையே குறிப்பிட்ட பகுதியில் குழுமியிருந்த பொது மக்களை அங்கிருந்து விலகிச் செல்லுமாறு பெனாம்பங் ஓசிபிடி துணை கண்காணிப்பாளர் ரத்தன் குமார் அறிவுறுத்தியதுடன் காவல்துறையினருக்கு தொடர் கட்டளைகளையும் பிறப்பித்துக் கொண்டிருந்தார். ஆனால் இக்காட்சிகளை படம்பிடிக்க பத்திரிகை புகைப்படக்காரர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன.

சுலு படையினருடன் தொடர்பு

இந்நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு கொள்ளையர்களுக்கும், பிலிப்பைன்ஸ் சுலு படையினருக்கும் தொடர்பு இருக்கலாம் என சபா காவல்துறை சந்தேகப்படுகின்றது.

அவர்களுக்கும், சுலு படையினருக்கும் என்ன தொடர்பு என்பதை அறிய அந்த இரு கொள்ளையர்களின் பின்னணியை காவல்துறை தீவிரமாக ஆராயத் தொடங்கியுள்ளது.

இது குறித்து சபா காவல்துறை ஆணையர் டத்தோ ஜலாலுதின் அப்துல் ரஹ்மான் இன்று வெளியிட்ட அறிக்கையில், அந்த இரு கொள்ளையர்களும் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவித்தார்.

அந்த இருவரில் ஒருவர் அனைத்துலக கடவுச் சீட்டு வைத்திருந்ததாகவும், மற்றொருவர் போலியான மலேசிய அடையாள அட்டை (மை காட்) வைத்திருந்ததாகவும் தெரிவித்தார்.

எனினும், காவல்துறை அவர்கள் இருவர் குறித்து தீவிர விசாரணை நடத்தும் வரை, பொதுமக்கள் யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்று ஜலாலுதின் கேட்டுக்கொண்டார்.