Home வணிகம்/தொழில் நுட்பம் தென்கொரியாவிலேயே ஐபோன் 6 விற்பனையில் சாம்சுங்கை வீழ்த்தியது!

தென்கொரியாவிலேயே ஐபோன் 6 விற்பனையில் சாம்சுங்கை வீழ்த்தியது!

641
0
SHARE
Ad

note-vs-iphoneசியோல், நவம்பர் 1 – உலக அளவில் வெளியானது முதல் சாதகமான, சில நேர்மறையான விமர்சனங்களை சந்தித்து வரும் ஐபோன் 6 மற்றும் 6 பிளஸ் திறன்பேசிகள் விற்பனையிலும், பயனர்களின் முன்பதிவுகளிலும் பெரும் சாதனைகளை நிகழ்த்தி வருகின்றன.

இந்நிலையில், சாம்சுங் நிறுவனத்தின் சொந்த நாடான தென் கொரியாவிலும் சாம்சுங்கின் கேலக்சி 4 நோட் திறன்பேசிகளை வீழ்த்தி பயனர்களின் விருப்பப் பட்டியலில் ஐபோன் 6 முதலிடத்தில் உள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 9-ம் தேதி வெளியான ஐபோன் 6 திறன்பேசிகள் பல்வேறு புதிய வசதிகள் மற்றும் தொழில்நுட்ப அம்சங்களை உள்ளடக்கி உள்ளதால், வாடிக்கையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இந்நிலையில் சாம்சுங் நிறுவனத்தின் சொந்த நாடான தென் கொரியாவில், ஐபோன் 6 நேற்று முதல் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

விற்பனைக்கான முன்பதிவு தொடங்கப்பட்டது முதல், ஐபோன் 6-ஐ  பெறுவதில் வாடிக்கையாளர்கள் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வந்தனர்.

அறிவிப்பு வெளியான முதல் 30 நிமிடங்களுக்குள் சுமார் 50,000-திற்கும் அதிகமான திறன்பேசிகளும், அடுத்த  20 நிமிடங்களுக்குள் சுமார் 20,000  திறன்பேசிகளும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. தற்போது இந்த எண்ணிக்கை 100,000 தாண்டியுள்ளதாகக் கூறப்படுகின்றது.

இங்கு குறிப்பிட வேண்டிய தகவல் என்னவென்றால், ஆப்பிளுக்கு தென் கொரியாவில் 6 சதவீத விற்பனை சந்தை பங்குகளே உள்ளன. ஆனால் சாம்சுங்கிற்கு 63 சதவீத பங்குகள் உள்ளது குறிப்பிடத்தக்க ஒன்றாகும்.