Home அவசியம் படிக்க வேண்டியவை தென்கிழக்கு ஆசியாவில் முதல் ‘ஆங்ரி பெர்ட்ஸ்’ பூங்கா ஜோகூரில் திறக்கப்பட்டது

தென்கிழக்கு ஆசியாவில் முதல் ‘ஆங்ரி பெர்ட்ஸ்’ பூங்கா ஜோகூரில் திறக்கப்பட்டது

505
0
SHARE
Ad

ANGRY_BIRDS Logoஜோகூர்பாரு, நவம்பர் 1 – நேற்று முதல் பிரபல செல்பேசி  விளையாட்டு மென்பொருளான ‘ஆங்ரி பெர்ட்ஸ்’ (ஆத்திரப் பறவைகள்) அம்சங்களை அடிப்படையாகக் கொண்ட விளையாட்டுப் பூங்கா ஜோகூர் பாருவில் செயல்படத் தொடங்கியுள்ளது.

இங்குள்ள கொம்தார் ஜேபிசிசி வணிக வளாகத்தில் திறக்கப்பட்டுள்ள இப்பூங்காவைக் காண நேற்று ஏராளமானோர் கூடினர். காலை 10 மணியளவில் இப்பூங்கா பொது மக்களுக்காக திறக்கப்பட்ட போது ஆங்ரி பெர்ட்ஸ் ரசிகர்கள் பலர் வரிசையில் காத்திருந்தனர்.

அறிவுசார் மற்றும் பொதுபோக்கு அம்சங்களுடன் கூடிய பல்வேறு விளையாட்டுகளை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விளையாடிக் களித்தனர். ஆங்ரி பெர்ட்ஸ் விளையாட்டை உருவாக்கிய பின்லாந்து நாட்டைச் சேர்ந்த ரோவியோ என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடனான கூட்டு ஒப்பந்தத்தின் கீழ் இப்பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

ஜோகூர் பாருவில் அமைக்கப்பட்டுள்ளதால், சிங்கப்பூரிலிருந்து வரும் சுற்றுப் பயணிகளையும் இந்த விளையாட்டு மையம் அதிகமாகக் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நுழைவுக் கட்டணமாக 60 ரிங்கிட் முதல் 75 ரிங்கிட் வரை வசூலிக்கப்படுகிறது. மேலும் தனி நபர்கள், குடும்பம், ஆண்டுச் சந்தா என பல்வேறு பிரிவுகளின் கீழ் பலவிதமான நுழைவுச் சீட்டுகளும் உள்ளன.

தினமும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை பூங்கா திறந்திருக்கும்.  10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு பெரியவர்களின் துணை அவசியம்.