பிரதமரின் அழைப்பு, எனக்கு அளிக்கப்பட்ட மிகச் சிறந்த கௌரவம் என கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். இந்நிலையில் கமல்ஹாசன் இத்திட்டத்தின் முதற்கட்டப் பணியாக ஏரிகளை தூய்மைப்படுத்தும் பணியைத் துவங்க உள்ளார்.
கமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7-ஆம் தேதி ஆரம்பிக்கப்பட உள்ள இப்பணி தாம்பரம்-வேளச்சேரி முதன்மை சாலையில் உள்ள மாதம்பாக்கம் ஏரியில் இருந்து தொடங்கப்பட உள்ளது. கமல் நற்பணி இயக்கத்தைச் சேர்ந்தவர்களும், திரையுலக நண்பர்களும் இத்திட்டத்தில் கலந்து கொள்கிறார்கள்.
பிற்பகல் 3 மணி அளவில் சென்னை தூர்தர்ஷன் அலுவலகம் எதிரே உள்ள அண்ணா அரங்கத்தில், தூய்மை இந்தியா இயக்கத்தின் பணிகள் குறித்தும், இயக்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் கமல்ஹாசன் அறிவிப்பார் என்று அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.