Home அவசியம் படிக்க வேண்டியவை பினாங்கில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியில் பக்காத்தானுக்கு அக்கறை இல்லை – சரவணன் குற்றச்சாட்டு

பினாங்கில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியில் பக்காத்தானுக்கு அக்கறை இல்லை – சரவணன் குற்றச்சாட்டு

564
0
SHARE
Ad

DATUK SERI G PALANIVELஜார்ஜ் டவுன், நவம்பர் 3 – கடந்த 2008 -ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது தொடங்கி பினாங்கு மாநிலத்தில் இந்திய சமுதாயத்தின் வளர்ச்சியில் அக்கறை காட்டாமல் இருப்பதாக பினாங்கு மாநில பக்காத்தான் அரசாங்கத்தை மஇகா உதவித் தலைவர் டத்தோ எம்.சரவணன் சாடியுள்ளார்.

மேலும், பினாங்கு மாநில அரசாங்கத்தின் இந்த அக்கறையின்மை இந்திய சமுதாயத்தை ஓரங்கட்டுவது போல் உள்ளது என்றும் சரவணன் குறிப்பிட்டுள்ளார்.

“பினாங்கு மாநிலத்தில் பல மலேசிய இந்தியர்கள் வேலையின்றி உள்ளார்கள். தொழிற்சாலைகளில் அவர்களுக்கு பதிலாக வெளிநாட்டினர் அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த பிரச்சனைக்கு மாநில அரசாங்கம் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று வடக்கு மலேசியா மலையாளிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கலந்து கொண்ட சரவணன் இவ்வாறு தெரிவித்தார்.

#TamilSchoolmychoice