டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அஜிங்க்ய ரஹானேவும், ஷிகர் தவனும் இந்தியாவின் முதல் ஆட்டத்தை தொடங்கினர். 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 363 ரன்கள் குவித்தது இந்தியா.
பின்னர் ஆடிய இலங்கை அணி 39.2 ஓவர்களில் 194 ரன்களுக்கு சுருண்டது. இஷாந்த் சர்மா 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ், அக்ஷர் படேல் ஆகியோர் தலா இரு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன் மூதல் முதல் ஒருநாள் போட்டியில் 169 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி கண்டது.
Comments