Home நாடு ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: அன்வார் தான் அந்த ‘மேல் ஒய்’ – அரசு தரப்பு வாதம்

ஓரினப்புணர்ச்சி வழக்கு 2: அன்வார் தான் அந்த ‘மேல் ஒய்’ – அரசு தரப்பு வாதம்

510
0
SHARE
Ad

Muhammad Shafee Abdullahபுத்ரா ஜெயா, நவம்பர் 3 – ஓரினச்சேர்க்கை வழக்கில் தண்டனையை எதிர்த்து எதிர்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை 5 வது நாளாக இன்று நடைபெற்றது.

எனினும், இந்த வழக்கு நாளை செவ்வாக்கிழமை காலை ஒத்தி வைக்கப்பட்டது.

கூட்டரசு நீதிமன்றத்தில் இன்று நடைபெற்ற விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் டான்ஸ்ரீ முகமட் சஃபி, இந்த வழக்கு தொடர்பான சமர்ப்பிப்புகளுக்கு மேலும் 2 மணி நேர அவகாசம் கேட்ட காரணத்தால் விசாரணை நாளை ஒத்தி வைக்கப்பட்டது.

#TamilSchoolmychoice

முன்னதாக, முகமட் சைபுல் புகாரியின் ஆடைகளில் இருந்து எடுக்கப்பட்ட மரபணு மாதிரிகளும், அன்வாரின் உடமைகளிலிருந்து எடுக்கப்பட்ட மாதிரிகளும் ஒத்து இருப்பதாக ஆதாரங்களை சஃபி சமர்ப்பித்தார்.

‘மேல் ஒய்’ என்ற அந்த மரபணு மாதிரி அன்வாருடையது தான் என்று தனது தரப்பு வாதத்தை நீதிபதிகள் முன் வைத்தார்.

இந்த வழக்கு விசாரணை நாளை காலை மீண்டும் துவங்குகிறது.