மகன் சண்முகபாண்டியன் நடிக்கும் “சகாப்தம்’ படப்பிடிப்புக்காக வந்திருந்ததாக விஜயகாந்த் கூறியிருந்தார். இந்த நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் சென்னை புறப்பட்டார்.
நேற்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் “ஒரு மாதமாக வெளிநாட்டில் தங்கியிருந்தேன். தொலைக்காட்சி பார்க்கவில்லை. செய்தித்தாள் படிக்கவில்லை. அதனால், தமிழக அரசியல் நிலவரம் தெரியவில்லை”.
“கட்சி நிர்வாகிகளுடன் பேசி, அதற்குப் பிறகுதான் பேரவைக் கூட்டத்துக்குத் தயாராக வேண்டும்” என்று கூறியதாக தமிழக செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணிச் செயலாளர் சுதீஷ் ஆகியோர் இந்த சந்திப்பின் போது உடன் இருந்துள்ளனர்.