Home இந்தியா திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைய வேண்டும் – வைகோ பரபரப்பு பேச்சு!

திமுகவும், அதிமுகவும் ஒன்றிணைய வேண்டும் – வைகோ பரபரப்பு பேச்சு!

490
0
SHARE
Ad

vaikoமதுரை, டிசம்பர் 10 – திராவிட கொள்கைகளை காப்பாற்ற திமுகவும், அதிமுகவும் தமிழகத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என வைகோ அழைப்பு விடுத்துள்ளார்.

தேர்தல் சமயத்தில் மட்டும் இரண்டு திராவிட கட்சிகளும் எதிர்கட்சிகள்போல் செயல்பட்டு கொள்ளலாம் எனவும் வைகோ கூறியுள்ளார்.

மதுரை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, “உலகில் வாழும் அனைவருக்கும் பொதுவான நூல் திருக்குறள் மட்டுமே”.

#TamilSchoolmychoice

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் இந்துத்துவா கருத்துக்களை பரப்புவதற்காக பகவத் கீதையை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்”.

“பகவத் கீதையில் அர்ஜூனனுக்கு போரின்போது கண்ணன் போதிக்கும் கருத்துக்கள் ஏற்றுக்கொள்வதாக இருந்தாலும், அது ஒரு குறிப்பிட்ட மதத்தின் இதிகாச நூல் மட்டுமே ஆகும். இதனை எல்லா மதங்களையும் சேர்ந்தவர்களாலும் ஏற்றுக்கொள்ள முடியாது”.

“அதேபோல், யாராவது ஒருவர் பைபிளையோ, குரானையோ தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என கூறினால் எப்படி ஏற்றுக்கொள்ள முடியாதோ? அதேபோன்றதுதான் பகவத்கீதையும்”.

“ஆனால் அனைத்து மதத்தினருக்கும் பொதுவான நூல் திருக்குறள் மட்டுமே. எனவே திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.”

“பல லட்சம் தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சே திருப்பதிக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு விதமான போராட்டங்கள் நடத்தப்படும்”.

“அதேபோல் , ராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஆந்திராவிற்கு மதிமுக தொண்டர்கள் சென்றுள்ளனர் என்றார். மேலும், திராவிட கொள்கைகளை காப்பாற்ற திமுகவும், அதிமுகவும் தமிழகத்தில் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.”

“தேர்தல் சமயத்தில் மட்டும் இரண்டு திராவிட கட்சிகளும் எதிர்கட்சிகள்போல் செயல்பட்டு கொள்ளலாம் எனவும்” வைகோ கூறினார்.

இதே வைகோ கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக உடன் கூட்டணி வைத்திருந்த போது, தமிழகத்தில் வீசும் மோடி அலையில் அதிமுகவும், திமுகவும் மாயமாகிவிட்டன என்று கூறினார்.

கூட்டணியில் இருந்து விலகிய உடன் மீண்டும் திராவிட கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.