Home அவசியம் படிக்க வேண்டியவை இரட்டை கோபுரத்தின் முன்னால் மலேசியாவிலேயே உயர்ந்த கிறிஸ்மஸ் மரம்!

இரட்டை கோபுரத்தின் முன்னால் மலேசியாவிலேயே உயர்ந்த கிறிஸ்மஸ் மரம்!

801
0
SHARE
Ad

கோலாலம்பூர், டிசம்பர் 14 – கிறிஸ்மஸ் பெருநாள் நெருங்கி வரும் இந்த வேளையில் எல்லா இடங்களிலும் கிறிஸ்மஸ் மரங்களை உருவாக்கி, வண்ண விளக்குகள் பொருத்தி, அலங்கரித்து வைப்பது தொன்று தொட்டு நிகழ்ந்து வரும் வழக்கமாகும்.

அந்த வகையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் உள்ள உயர்ந்த கட்டிடமான பெட்ரோனாஸ் இரட்டை கோபுரத்தின் முன்னால் நாட்டிலேயே உயர்ந்த கிறிஸ்மஸ் மரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

 A Christmas tree is pictured next to illuminated water fountain near the Malaysian landmark 'Petronas Twin Towers' in Kuala Lumpur, Malaysia, late 10 December 2014. Christmas is celebrated by Christians on the 25th of December to commemorate the birth of Jesus, the central figure of Christianity.  EPA/AZHAR RAH

#TamilSchoolmychoice

வண்ணமயமான விளக்கொளியில் வானை நோக்கிப் பாயும் நீருற்றுகள் ஒருபுறத்திலும், விண்ணை முட்டும் இரட்டை கோபுரம் மறுபுறத்திலும் இருக்க, 32 மீட்டர் உயரம் கொண்ட மலேசியாவிலேயே உயரமான கிறிஸ்மஸ் மரம் கம்பீரமாக காட்சியளிக்கின்றது. கடந்த டிசம்பர் 9ஆம் தேதி இந்த கிறிஸ்மஸ் மரம் பார்வையாளர்களுக்காக திறந்து வைக்கப்பட்டது.

 A Christmas tree stands against the Malaysian landmark Petronas Twin Towers in Kuala Lumpur, Malaysia, late 10 December 2014. Christmas is celebrated by Christians on the 25th of December to commemorate the birth of Jesus, the central figure of Christianity.

வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட கிறிஸ்மஸ் மரத்தின் மற்றொரு அழகுத் தோற்றம்…

படங்கள்: EPA