Home இந்தியா ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கு: ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை!

ஏர்செல்-மேக்சிஸ் ஒப்பந்த வழக்கு: ப.சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை!

590
0
SHARE
Ad

Chidambaram-sadnessசென்னை, டிசம்பர் 17 – ஏர்செல் – மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதி வழங்கியது தொடர்பாக முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரத்திடம் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது.

ஏர்செல் நிறுவன பங்குகளை மேக்சிஸ் நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் ஒப்பந்தத்திற்கு வெளிநாட்டு முதலீடு ஊக்குவிப்பு வாரிய அனுமதியை 2006 ஆம் ஆண்டு சிதம்பரம் வழங்கியிருந்தார்.

600 கோடி ரூபாய் மதிப்பு வரையிலான விற்பனை ஒப்பந்தத்திற்கு மட்டுமே நிதியமைச்சராக இருப்பவர் ஒப்புதல் வழங்க முடியும் என்ற நிலையில், 3ஆயிரத்து 500 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு சிதம்பரம் அனுமதியளித்தது சர்ச்சையை கிளப்பியது.

#TamilSchoolmychoice

இதுதொடர்பாக சிதம்பரத்திடம் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள், ஏர்செல்- மேக்ஸிஸ் ஒப்பந்தத்திற்கு அனுமதியளித்ததில் விதிகள் மீறப்பட்டதா என கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த சிதம்பரம், பொருளாதார விவகாரத்துறை செயலாளர் மற்றும் கூடுதல் செயலாளர் பரிந்துரைத்த ஆவணங்களிலேயே தாம் கையெழுத்திட்டதாக விளக்கமளித்துள்ளார்.