கோலாலம்பூர், பிப்.27- மாதம் 1,100 வெள்ளி குறைந்த பட்ச சம்பளத்தை எதிர்க்கட்சியின் தேர்தல் கொள்கை அறிக்கை வெளியிட்டிருந்தது.
அதனைச் செய்தால் நாட்டில் வேலையில்லாத் திண்டாட்டமும் பண வீக்கமும் ஏற்படும் என்று மனிதவளத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் (படம்) வன்மையாகச் சாடினார்.
தனியார் துறைகளில் அதிக சம்பளத்தை வழங்க முடியாது. இதனால் ஏராளமான தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும்.
13வது பொதுத் தேர்தல் கொள்கை அறிக்கையை மக்கள் கூட்டணித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார், நேற்று முன்தினம் வெளியிட்டார்.
அவ்வறிக்கையில், தனியார் துறைகளில் குறைந்த பட்ச அடிப்படையில் மாதச் சம்பளமாக 1,100 வெள்ளியாக வழங்கப்பட வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.
இதனை நடைமுறைப் படுத்த இயலாது. இந்த அடிப்படைச் சம்பளத்தை அமல்படுத்தினால் நாட்டில் பண வீக்கமும் வேலையில்லாத் திண்டாட்டமும்தான் ஏற்படும் என்று டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம் செய்தியாளர்களிடம் கூறினார்.