Home Featured நாடு “நாம் எங்கே போகிறோம்” – குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் இலக்கிய உரை!

“நாம் எங்கே போகிறோம்” – குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் இலக்கிய உரை!

819
0
SHARE
Ad

Kunra Kudi Adikalar-Talk-in KLகோலாலம்பூர் – தமிழகத்தைச் சேர்ந்த பிரபல ஆன்மீகத் தலைவர்களில் ஒருவரான தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் இலக்கியச் சொற்பொழிவு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மே 3ஆம் தேதி மாலை 5.30 மணியளவில் தலைநகர் டான்ஸ்ரீ சோமா அரங்கில் நடைபெறவிருக்கின்றது.

தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் ஆதரவில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

இந்த நிகழ்ச்சிக்கு மஇகா தேசியத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் தலைமை தாங்குவார். தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோ பி.சகாதேவனும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்பிப்பார்.

#TamilSchoolmychoice

இந்திய சமூக நல இயக்கங்களும் இந்த சொற்பொழிவுக் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கின்றன.

குன்றக்குடி பொன்னம்பல அடிகளாரின் கோலாலம்பூர் சொற்பொழிவு குறித்து டாக்டர் சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையொன்றில், இலவசமாக நடைபெறும் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சியில் கலந்து  கொண்டு அடிகளாரின் இலக்கிய உரையை பொதுமக்களும், இலக்கிய ஆர்வலர்களும் கேட்டு பயன்பெற வேண்டுமெனக் கேட்டுக் கொண்டுள்ளார்.