Home Featured வணிகம் இலண்டனில் முதல் நிர்வாண உணவகம்! ஆடையின்றி உணவருந்த 30,000 பேர் வரிசை கட்டி நிற்கின்றனர்!

இலண்டனில் முதல் நிர்வாண உணவகம்! ஆடையின்றி உணவருந்த 30,000 பேர் வரிசை கட்டி நிற்கின்றனர்!

755
0
SHARE
Ad

london-city-இலண்டன் – நிர்வாணமாக அமர்ந்து உணவு உண்ணும் அனுபவத்தை மக்களுக்குத் தர இலண்டனில் ஓர் உணவகம் தயாராகி வருகின்றது. இந்த நகரில் வித்தியாசமான, விலையுயர்ந்த உணவகங்கள் சிலவற்றை நடத்தி வரும் செப் லயால் (Seb Lyall) அடுத்து திறக்கவிருக்கும் புதுமையான உணவகம்தான் இந்த நிர்வாண உணவகம்.

இந்த உணவக உரிமையாளர் செப் லயால் தினந்தோறும் காலையில் தனது வீட்டில் நிர்வாணமாக அமர்ந்து காலை உணவு உண்ணும் பழக்கம் உடையவராம். அதில் சுகம் கண்ட தனது அனுபவத்தை மற்றவர்களும் அனுபவித்து உணர வேண்டும் என்பதற்காகவே இந்த நிர்வாண உணவகத்தை திறந்திருக்கிறார்.

Bunyadi-Nude Rest-websiteநிர்வாணமாக உணவருந்த முதலில் அந்த உணவகத்தின் இணைய அகப்பக்கம் சென்று பதிந்து கொள்ள வேண்டும்…

#TamilSchoolmychoice

“அப்படி நான் செய்வது என்னை விடுதலை செய்து சுதந்திரமாக்கி விட்டது போன்ற உணர்வை எனக்குத் தருகின்றது. சில சமயங்களில் பக்கத்து வீட்டுக்காரர்கள் கூட நான் நிர்வாணமாக அமர்ந்து உணவு உண்ணுவதை பார்ப்பார்கள். பரவாயில்லை. அந்த மாதிரியான சூழலைத்தான் நான் எனது உணவகத்தில் மக்களுக்கு ஏற்படுத்தித் தரப்போகிறேன்” என்கிறார் செப் லயால்.

புன்யாடி ( Bunyadi) என பெயர் சூட்டப்பட்டிருக்கும் இந்த உணவகம் எதிர்வரும் ஜூன் மாதம் திறக்கப்படும்.

ஆனால், இந்த உணவகத்தில் நிர்வாணமாக அமர்ந்து உணவு உண்ண முன்பதிவு செய்ய வேண்டும் என்பதால் இப்போதே 30,000-க்கும் மேற்பட்டோர்  பதிந்து கொண்டுள்ளனராம். எதிர்வரும் நாட்களில் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Bunyadi-Nude Rest-Londஇதுவரை 30,376 பேர் நிர்வாணமாக உணவருந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றார்கள் எனக்கூறுகிறது இலண்டன் புன்யாடி உணவகம்…

ஆடைகளோடு உள்ளே வரும் வாடிக்கையாளர்கள் தங்களின் ஆடைகளைக் கழற்றி வைத்து விட்டு, அவர்களுக்கு எனத் தரப்படும் பிரத்தியேக விரிப்பில் நிர்வாணமாக அமர்ந்து கொள்ளலாம். சுகாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்த நடைமுறை பின்பற்றப்படும். உணவருந்தி முடிந்ததும், அந்த விரிப்பை கையோடு வீட்டுக்கு எடுத்துச் செல்லலாம்.

உணவருந்தும் இடங்கள் மூங்கில் தடுப்புகளால் தடுக்கப்பட்டிருக்கும் என்பதால் மற்றவர்களை நேரடியாக நீங்களும் பார்க்க முடியாது, உங்களின் நிர்வாணத்தையும் மற்றவர்கள் பார்க்க முடியாது.

மங்கலான மெழுகுவர்த்தி வெளிச்சம் மட்டுமே கொண்ட சூழல் இருக்குமாம்.

உள்ளே புகைப்படம் எடுக்கவும் அனுமதி இல்லை.

ஒரு நபருக்கு ஐந்து வகை உணவுகளோடு 80 முதல் 90 அமெரிக்க டாலர் வரை இந்த உணவகத்தில் கட்டணம் விதிக்கப்படும்.

ஆக, இந்த நிர்வாண உணவருந்தும் அனுபவத்தைப் பெற இதுவரை 30,000 பேருக்கும் மேற்பட்டோர் பதிந்து கொண்டு காத்திருக்கிறார்கள்.

-செல்லியல் தொகுப்பு