சென்னை – தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, தமிழகத்தின் முக்கிய அரசியல் தலைவர்களின் வேட்புமனுக்கள் எதுவும் நிராகரிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் இதுவரை 2240 வேட்புமனுக்கள் பல்வேறு காரணங்களுக்காக நிராகரிக்கப்பட்டன.
வேட்புமனுப் பாரங்களை பரிசீலித்து ஏற்றுக் கொள்ளும் பணிகள் இன்று தொடர்ந்து நடைபெற்றது.
வேட்பாளர்கள் வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கான இறுதி நாள் மே 2 ஆகும்.
பாமகவின் 3 வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன
பாமக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட 3 வேட்புமனுக்கள் இதுவரை நிராகரிக்கப்பட்டுள்ளன.
பாமக சார்பில் போட்டியிட ராமநாதபுரம், திருச்செந்தூர் மற்றும் தூத்துக்குடி ஆகிய தொகுதிகளில் தாக்கல் செய்திருந்த வேட்பாளர்களின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளன.
இது அன்புமணி தலைமையிலான பாமக-விற்கு ஒரு பின்னடைவாகவும், அங்கு போட்டியிடும் மற்ற கட்சி வேட்பாளர்களுக்கு சாதகமானதாகவும் பார்க்கப்படுகின்றது.