Home One Line P2 ரஜினி தமது கட்சியை ‘மக்கள் சேவை கட்சி’ என பெயரிடக்கூடாது!

ரஜினி தமது கட்சியை ‘மக்கள் சேவை கட்சி’ என பெயரிடக்கூடாது!

583
0
SHARE
Ad

சென்னை: அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் ரஜினிக்கு எதிராக களம் இறங்கி உள்ளது. ரஜினியின் கட்சிக்கு மக்கள் சேவை கட்சி என பெயரிடப்பட்டதை அடுத்து இந்த எதிர்ப்பு எழுந்துள்ளது.

அகில இந்திய மக்கள் சேவை இயக்கம் என்பது நம்மாழ்வார் கொள்கைப் படி 25 ஆண்டுகளாக இயங்கி வரும் அமைப்பு என்றும், தங்கள் அமைப்பை குறிக்கும் வகையில் மக்கள் சேவை கட்சி என பெயர் வைத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படுவதாகவும் அது கூறியுள்ளது.

ரஜினிகாந்த் தாம் கட்சி தொடங்குவது குறித்த அறிவிப்பை டிசம்பர் 31-ஆம் தேதி அறிப்பார் என்று தெரிவித்திருந்தார். இதனிடையே, மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

“புதிதாக கட்சி துவங்கவுள்ள ரஜினிகாந்த் மக்கள் சேவை கட்சி என்ற பெயரில் கட்சியை இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய கூடாது. அப்படி பதிவு செய்தால் மக்கள் சேவை இயக்கத்திற்கும் மக்கள் சேவை கட்சிக்கும் பொதுமக்களிடையே குழப்பத்தை விளைவிக்கும். கடந்த 25 ஆண்டுகளாக மக்கள் நலன் கருதி நம்மாழ்வார் கொள்கை வழியில் இயங்கி வரும் மக்கள் சேவை இயக்கத்தின் செயல்பாடுகளுக்கும் சேவைகளுக்கும் களங்கம் விளைவிக்கும்,” என்று அந்த இயக்கம் தெரிவித்துள்ளது.