Home One Line P2 வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான சுரண்டல்: 5 மலேசியர்கள் கைது

வெளிநாட்டு தொழிலாளர்கள் மீதான சுரண்டல்: 5 மலேசியர்கள் கைது

635
0
SHARE
Ad
படம் நன்றி: ஆஸ்திரேலிய எல்லைப் படை

பெர்த்: பெர்த்தில் கட்டுமானத் தொழிலுக்காக வெளிநாட்டு தொழிலாளர்களை சுரண்டும் கும்பலில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் ஐந்து மலேசிய ஆடவர்களை ஆஸ்திரேலிய எல்லைப் படை (ஏபிஎப்) தடுத்து வைத்துள்ளது.

ஐந்து பேரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் அனைவரும் சட்டவிரோதமாக ஆஸ்திரேலியாவில் வசித்து வருகிறார்கள் என்றும் பெர்த்தின் முன்னணி செய்தித்தாள் தி வெஸ்ட் ஆஸ்திரேலியன் செய்தி வெளியிட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள் மற்றும் ஆவணமற்ற புலம்பெயர்ந்தோரை தவறாக பயன்படுத்துவதற்காகவும் தொழிலாளர் நிறுவனங்களை குறிவைத்து நாடு தழுவிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்ட செயற்பாட்டு நடவடிக்கையில், இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

#TamilSchoolmychoice

டிசம்பர் 17 அன்று பெர்த்தின் வடகிழக்கு புறநகர்ப் பகுதியான எம்பில்டனில் உள்ள ஒரு வீட்டில் 50, 51 மற்றும் 64 வயதுடைய மூன்று ஆண்களை ஏபிஎப் அதிகாரிகள் கைது செய்தனர்.

டிசம்பர் 10- ஆம் தேதி, 52 வயதான ஒருவர் டயனெல்லாவில் உள்ள ஒரு வீட்டில் தடுத்து வைக்கப்பட்டார். ஐந்தாவது மலேசியர், 46 வயது, பெக்கன்ஹாமில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் கைது செய்யப்பட்டார்.

டயானெல்லா மற்றும் பெக்கன்ஹாம் பெர்த்தின் புறநகர்ப் பகுதிகளாகும்.

52 வயதான ஒருவர் ஏற்கனவே மலேசியாவுக்கு நாடு கடத்தப்பட்டதாக மேற்கு ஆஸ்திரேலிய செய்தி வெளியிட்டுள்ளது. மற்ற நான்கு பேரும் ஆஸ்திரேலியாவில் குடிநுழைவுத் துறை தடுப்புக் காவலில் உள்ளனர்.