Home One Line P1 கொவிட்-19 தடுப்பு மருந்தை பிரதமரும் முதலில் பெற்றுக் கொள்வார்

கொவிட்-19 தடுப்பு மருந்தை பிரதமரும் முதலில் பெற்றுக் கொள்வார்

435
0
SHARE
Ad

கோலாலம்பூர்: 6.4 மில்லியன் கொவிட்-19 தடுப்பு மருந்துகளைப் பெறுவதற்கான அஸ்ட்ராஜெனெகாவுடன் அரசாங்கம் கையெழுத்திட்டுள்ளதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று அறிவித்துள்ளார்.

இது நாட்டில் பெறப்பட வேண்டிய தடுப்பு மருந்துகளில் கூடுதலாக 10 விழுக்காடு ஆகும்.

கோவக்ஸ் மற்றும் பிபைசர் நிருவனங்களுடன் முன்னர் கையெழுத்திட்ட இரண்டு ஒப்பந்தங்கள் உட்பட, இப்போது மொத்தம் 40 விழுக்காடு விநியோக உத்தரவாதத்தை அரசாங்கம் பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கோவாக்ஸ் மற்றும் பிபைசர் நிருவனத்துடன் கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம், மலேசியா நாட்டின் 30 விழுக்காடு மக்களை உள்ளடக்கிய தடுப்பு மருந்துகளைப் பெற திட்டமிடப்பட்டுள்ளது.

“நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 80 விழுக்காடு அல்லது 26.5 மில்லியனுக்கும் அதிகமான கூடுதல் தடுப்பு மருந்து உத்தரவாதங்களைப் பெறுவதற்கு சினோவாக், கன்சினோ மற்றும் கமலேயா ஆகியோருடன் அரசாங்கம் இறுதி பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது,” என்று பிரதமர் கூறினார்.

இதுவரை கையெழுத்திடப்பட்ட மற்றும் கையெழுத்திடப்படும் அனைத்து பேச்சுவார்த்தைகள் மற்றும் ஒப்பந்தங்கள் மூலம், அரசாங்கம் மொத்தம் 504.4 மில்லியன் அமெரிக்க டாலர்களை (2.05 பில்லியன் ரிங்கிட்) செலவிடும் என்று பிரதமர் கூறினார்.

“பெறப்பட்ட தடுப்பூசி பாதுகாப்பாகவும், பயனுள்ளதாகவும் இருப்பதை உறுதி செய்யும்” என்றும் அவர் கூறினார். அதனால் தாம் அதனை பெறும் முதல் நபர்களில் ஒருவராக இருப்பார் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றுநோய் மேலும் பரவாமல் தடுப்பதற்கான முயற்சிகள், மக்களின் மற்றும் நாட்டின் பொருளாதார நிலைமையை உடனடியாக சரிசெய்ய முடியும் என்பதை உறுதிப்படுத்துவது முக்கியம் என்பதை பிரதமர் கூறினார்.