Home One Line P1 கொவிட்19: கிள்ளான் மருத்துவமனை அனைத்து ஊழியர்களும் பரிசோதிக்கப்படுவர்

கொவிட்19: கிள்ளான் மருத்துவமனை அனைத்து ஊழியர்களும் பரிசோதிக்கப்படுவர்

364
0
SHARE
Ad

கோலாலம்பூர்: அண்மையில் கொவிட் -19 சம்பவங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையில் உள்ள அனைத்து ஊழியர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர் என்று சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் பரவும் அபாயத்தைக் குறைப்பதற்காக இலக்கு வைக்கப்பட்ட பரிசோதனைகள் செயல்படுத்துவதைத் தவிர, இந்த நோக்கத்திற்கான சிறந்த வழிமுறையை மாநில சுகாதாரத் துறை தற்போது கவனித்து வருகிறது.

மருத்துவமனை ஊழியர்களுக்குப் பயன்படுத்த வேண்டிய சோதனை முறை குறித்து சிலாங்கூர் சுகாதாரத் துறையுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“அனைத்து ஊழியர்களும் அதிக ஆபத்து கொண்டவர்களாகக் கருதுவதால் நாங்கள் அவர்களைத் பரிசோதிப்போம்” என்று அவர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

கிள்ளான் மருத்துவமனையில் 62 சுகாதார ஊழியர்கள் மற்றும் 81 நோயாளிகள் சம்பந்தப்பட்ட 143 கொவிட்-19 சம்பவங்கள் உள்ளன. செர்டாங் மருத்துவமனையில் 37 ஊழியர்கள் மற்றும் 28 நோயாளிகள் சம்பந்தப்பட்ட 65 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.