Home One Line P1 முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சம்பந்தப்பட்ட பாலியல் பலாத்காரம் வழக்கு மார்ச் 30 தொடங்கும்

முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் சம்பந்தப்பட்ட பாலியல் பலாத்காரம் வழக்கு மார்ச் 30 தொடங்கும்

426
0
SHARE
Ad

ஈப்போ: பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பேராக் மாநில முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் பவுல் யோங் சூ கியோங்கின் வழக்கு விசாரணைக்கு, ஈப்போ உயர் நீதிமன்றம் அடுத்த ஆண்டு மார்ச் 30 முதல் ஒன்பது நாட்களை நிர்ணயித்துள்ளது.

மார்ச் 30 முதல் ஏப்ரல் 2 வரையிலும், ஏப்ரல் 5 முதல் 9 வரையிலும் விசாரணை தேதியை நீதிபதி ஹாஷிம் ஹம்சா நேற்று திங்கட்கிழமை நிர்ணயித்தார்.

அரசு தரப்பு 20 சாட்சிகளை அழைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காப்பு குழு மூன்று சாட்சிகளை அழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

#TamilSchoolmychoice

டிசம்பர் 15-ஆம் தேதி கூட்டரசு நீதிமன்றத்தின் தீர்ப்பைத் தொடர்ந்து, இந்த தேதி நிர்ணயிக்கப்பட்டது. இந்த வழக்கை ஈப்போ அமர்வு நீதிமன்றத்தில் இருந்து ஈப்போ உயர் நீதிமன்றத்திற்கு மாற்ற பவுல் மேல்முறையீட்டிருந்தார். அதன்படி வழக்கு விசாரணை இந்த தேதிக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஒருமித்த முடிவை தலைமை நீதிபதி தெங்கு மைமுன் துவான் மாட் தலைமையில் மூன்று நீதிபதிகள் கொண்ட குழு முன்வைத்தது.

இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர் ஒரு வருடம் காத்திருக்கும் நிலையில், இந்த வழக்கை மலேசியாவும், இந்தோனிசியாவும் கண்காணித்து வருகின்றன.

கடந்த ஆண்டு ஆகஸ்டு 23-ஆம் தேதி, யோங் அமர்வு நீதிமன்றத்தில் குற்றத்தை மறுத்தார். இந்தோனிசிய பணிப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைக்கு விண்ணப்பித்தார்.