Home One Line P2 ராகா வானொலி : நிகழ்ச்சிகளின் சில சிறப்பம்சங்கள்

ராகா வானொலி : நிகழ்ச்சிகளின் சில சிறப்பம்சங்கள்

420
0
SHARE
Ad

கோலாலம்பூர் : இந்த வாரத்தில் ராகா வானொலியின் நிகழ்ச்சிகள் சிலவற்றின் சிறப்பம்சங்களை இங்கே காணலாம்:

ராகாவின் சிறப்பு நிகழ்ச்சிகள்

மக்களுக்கு மக்கள்

இப்பண்டிகை காலங்களில் உதவிக் கோருபவர்களுக்கு நாடு தழுவிய நிலையில் ராகாவுடன் கைகோர்த்து உதவ அனைத்து மலேசியர்களும் வரவேற்கப்படுகின்றனர்! நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், ராகாவின் அகப்பக்கத்திற்குச் சென்று உதவி தேவைப்படும் ஒரு குடும்பத்தை, பதிவுப் படிவத்தைப் பூர்த்திச் செய்வதன் வழிப் பரிந்துரைக்க வேண்டும். மேலும், அவர்களுக்கு உதவ வேண்டிய காரணங்களைக் குறித்தும் சுருக்கமாகக் குறிப்பிட வேண்டும்.

#TamilSchoolmychoice

நன்கொடையாளர் அல்லது தன்னார்வலராக விரும்பும் இரசிகர்கள் பதிவுப் படிவத்தைப் ராகாவின் அகப்பக்கத்தில் பூர்த்திச் செய்யலாம்.

செவ்வாய், 22 டிசம்பர்

நேர்காணல்: ஹிப்னோதெரபி மூலம் உளவியல் பராமரிப்பின் நன்மைகள்

ராகா, காலை 8-9 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

விருந்தினர்: யுகா, உளவியலாளர்

ஹிப்னோதெரபி மூலம் உளவியல் பராமரிப்பின் நன்மைகள், மன ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் மற்றும் பலவற்றைப் பகிர்ந்துக் கொள்ளும் உளவியலாளர், யுகாவின் நேர்காணலை இரசிகர்கள் கேட்டுப் பயன்பெறலாம்.

வியாழன், 24 டிசம்பர்

தொற்றுநோய் சூழலை நேர்மறையானதாக மாற்றிய அனுபவம்

ராகா, காலை 7-8 மணி | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்

இத்தொற்றுநோய் காலக்கட்டத்தில் போராடி கொண்டிருக்கும் பிற நேயர்களை ஊக்குவிக்கும் வகையில் தொற்றுநோய் சூழலை நேர்மறையானதாக மாற்றிய அனுபவத்தை இரசிகர்கள் தொடர்புக் கொண்டுப் பகிர்ந்துக் கொள்ளலாம்.

அதுமட்டுமின்றி, மாலை 3 மணி முதல் கலக்கல் காலை குழுவினரை இரசிகர்கள் சந்தித்து உரையாடுவதோடு திரு. கவி தயாரித்த தேநீரையும் இலவசமாக அருந்தி மகிழலாம். திரு. கவி யூனிடன் பல்கலைக்கழகத்திலிருந்து இயந்திர பொறியியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்ற ஒரு பட்டதாரியாவார். தொற்றுநோயின் விளைவினால் அதிக வேலை வாய்ப்புகள் இல்லாத காரணத்தால் மசாலா தேநீர் வியாபாரத்தில் கால் பதித்தார்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை