Home One Line P2 பிக்பாஸ் 4 : அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்

பிக்பாஸ் 4 : அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்

1707
0
SHARE
Ad

சென்னை :ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் ஒளியேறிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் (4) தொடர்   நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் அர்ச்சனா வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம்  இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட 7 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர்.

ஆஜித், சோம் சேகர், ஷிவானி, அனிதா சம்பத், அர்ச்சனா, ரியோ , ஆரி அர்ஜூனன் ஆகியோரே அந்த எழுவராவார்.

#TamilSchoolmychoice

அவர்களில் ஆரி, ரியோ ஆகிய இருவரும் காப்பாற்றப்பட்டிருப்பதாக சனிக்கிழமை சனிக்கிழமை (டிசம்பர் 19) நடைபெற்ற நிகழ்ச்சியில் நிகழ்ச்சியின் நடத்துநரான கமல்ஹாசன் அறிவித்தார்.

எஞ்சிய ஐவரில் ஒருவர் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார் என்றும் கமல் தெரிவித்திருந்தார்.

அதைத் தொடர்ந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் அர்ச்சனா வெளியேற்றப்படுவதாக கமல்ஹாசன் அறிவித்தார். அர்ச்சனா பிக் பாஸ் 4 நிகழ்ச்சியில் 11-வது நாள்தான் பங்கேற்பாளராக உள்ளே நுழைந்தார்.

பின்னர் அர்ச்சனாவை மேடைக்கு அழைத்த கமல்ஹாசன் அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

கடந்த வாரத்தில் நடிகர் ஜித்தன் ரமேஷ், நடிகையும் மேடைப் பேச்சாளருமான நிஷா ஆகிய இருவரும் பிக்பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

இதற்கிடையில், கமல்ஹாசன் நடத்திவரும் பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழகத்தில் சர்ச்சைப் புயலை உருவாக்கியுள்ளது.

ஆளும் அதிமுக அரசை எதிர்த்துத் தொடர்ந்து கமல்ஹாசன் எதிரானக் கருத்துகளைத் தெரிவித்து வருகிறார்.

இதைத் தொடர்ந்து கமலின் பிக்பாஸ் நிகழ்ச்சி குடும்பங்களைக் கெடுப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகச் சாடியுள்ளார்.