Home One Line P2 பிக்பாஸ் 4 : மீண்டும் கமல்ஹாசன் வருகிறார்

பிக்பாஸ் 4 : மீண்டும் கமல்ஹாசன் வருகிறார்

1298
0
SHARE
Ad

சென்னை : கடந்த 3 ஆண்டுகளாக தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி உலகம் எங்கும் கோடிக்கணக்கான இரசிகர்களை பார்க்கும் வண்ணம் செய்தவர் கமல்ஹாசன்.

அந்த நிகழ்ச்சியின் மூலம் கமலும் கோடிக்கணக்கான ரூபாய் வருமானத்தைப் பெற்றார். கடந்த ஆண்டு அவருக்கு 150 மில்லியன் ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டது என ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.இந்த ஆண்டு பிக்பாஸ் மீண்டும் தொடங்குவதில் கொவிட்-19 பிரச்சனைகளால் தாமதம் ஏற்பட்டது.

எனினும் கூடியவிரைவில் இந்த ஆண்டுக்கான நிகழ்ச்சி தொடங்கவிருக்கிறது. இதை மறைமுகமாகத் தெரிவிக்கும் வண்ணம் கமல்ஹாசனின் உரையோடு கூடிய காணொளியை ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசை சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளது.

#TamilSchoolmychoice

அதில் பல விவகாரங்கள் குறித்துப் பேசும் கமல் அதன் பின்னர் இறுதியாக சரி வேலையை ஆரம்பிப்போம் என்கிறார். என்ன வேலை என்று பார்த்தால் “பிக்பாஸ் 4” என்ற எழுத்துகள் திரையில் ஒளிர்கின்றன.

இதைத் தொடர்ந்து பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் பங்கு பெறவிருக்கும் பிரபலங்கள் யார் என்பது குறித்த ஆரூடங்கள் இப்போதே தொடங்கிவிட்டன.

வின்னர், ஜெமினி, அன்பே சிவம் போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த கவர்ச்சி நடிகை கிரண் பிக்பாஸ் இல்லத்தில் நுழையவிருக்கும் பிரபலங்களில் ஒருவர் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டில் நடைபெற்ற பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் மலேசியாவைச் சேர்ந்த கலைஞர் முகேன் ராவ் முதல் வெற்றியாளராக வாகை சூடினார்.

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியை கமல்ஹாசன் அறிமுகப்படுத்தும் காணொளியைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: