Home கலை உலகம் பிக் பாஸ் 3 – முதன் முறையாக மலேசியக் கலைஞர் முகேன் ராவ் பங்கேற்றார்!

பிக் பாஸ் 3 – முதன் முறையாக மலேசியக் கலைஞர் முகேன் ராவ் பங்கேற்றார்!

1373
0
SHARE
Ad

சென்னை – பரவலாக எதிர்பார்க்கப்பட்டபடி, செல்லியல் உள்ளிட்ட ஊடகங்களின் ஆரூடங்களின்படி, மலேசியக் கலைஞரான முகேன் ராவ் நேற்று ஞாயிற்றுக்கிழமை  ஸ்டார் விஜய் தொலைக்காட்சி அலைவரிசையில் தொடங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக இந்த முறையும் கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார்.

இந்த முறை மலேசியாவில் இருந்து ஒரு கலைஞர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கு கொள்ளவிருக்கிறார் என்ற செய்தி ஊடகங்களிலும், சமூக ஊடகங்களிலும் அண்மையக் காலமாகப் பரவி வந்தது. தற்போது அது உறுதியாகியுள்ளது.

#TamilSchoolmychoice

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் முன்னோட்டமாகப் பேசிய முகேன் சென்னைக்குத் தான் வருவது இதுதான் முதல் தடவை எனத் தெரிவித்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் பார்க்கிறார்கள் என்று கூறிய கமல்ஹாசன், இலங்கையைச் சேர்ந்தவர்களும் இந்த முறை பங்கு பெறுகிறார்கள் என்று கூறி முகேனை அறிமுகப்படுத்தி வைத்தார்.

ஒரு பாடலைப் பாடிக் கொண்டே நிகழ்ச்சி மேடையில் தோன்றிய முகேனை அறிமுகப்படுத்தும்போது “ஏற்கனவே இங்கு மலேசியாவின் குரல் மிகப் பெரிய அளவில் கேட்கப்பட்டிருக்கிறது. அவர்தான் மலேசியா வாசுதேவன்” என்று கூறினார்.

அண்மையக் காலத்தில் முகேன் ராவ் மலேசிய மேடைகளில், பாடகராக, நிகழ்ச்சி படைப்பாளராக புகழ் பெற்று வருகிறார். குறிப்பாக, இன்ஸ்டாகிராம், முகநூல் போன்ற சமூக ஊடகங்களில் அவரை ஏராளமானோர் – குறிப்பாக பெண்கள் – பின்தொடர்கிறார்கள் என மலேசியக் கலையுலக நிலவரங்களை அறிந்த சிலர் தெரிவிக்கின்றனர்.

அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 181,000 பேர் பின்தொடர்கிறார்கள். அவருக்கென இருக்கும் இரசிகர்களின் அதிகாரத்துவ இன்ஸ்டாகிராம் பக்கத்தையும் 114,000 பேர் பின்தொடர்கிறார்கள்.

யூடியூப் வழி காணொளியாக தனது இசைப் பாடல்களை (மியூசிக் வீடியோ) முகேன் ராவ் உலவ விட்டு, அதன் மூலமும் அவர் மலேசியர்களிடையே குறிப்பாக இளைய சமுதாயத்தினரிடையே புகழ் பெற்றிருக்கிறார்.

அவரது சில யூடியூப் இசைப்பாடல்கள் 8 மில்லியனுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.

முகேன் மூலம் மலேசியர் ஒருவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தேர்ந்தெடுக்கப்படுவது இதுவே முதன் முறையாகும்.

அடுத்து : இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப் போகும் மற்ற 14 பிரபலங்கள் யார்?