Home நாடு ஓரினச் சேர்க்கை காணொளி: “நம்பிக்கைக் கூட்டணியின் நம்பகத்தன்மை வெளிப்படும் நேரம் இது!”- அப்துல் காடிர்

ஓரினச் சேர்க்கை காணொளி: “நம்பிக்கைக் கூட்டணியின் நம்பகத்தன்மை வெளிப்படும் நேரம் இது!”- அப்துல் காடிர்

746
0
SHARE
Ad
டத்தோ ஏ.காடிர் ஜாசின்

கோலாலம்பூர்: பொருளாதார விவகார அமைச்சர் முகமட் அஸ்மின் அலி சம்பந்தப்பட்ட ஓரினச் சேர்க்கை காணொளி விவகாரம் குறித்து, மூத்த பத்திரிகையாளரான அப்துல் காடிர் ஜாசின் தமது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

அவர் குறிப்பாக அக்காணொளியைப் பற்றி கருத்துரைக்கவில்லையென்றாலும், பாலியல் சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகளால் பதவி விலகிய வெளிநாட்டு அமைச்சர்களின் பட்டியலை முன்வைத்துப் பேசியுள்ளார்.

எனது தவறான நடத்தைகளிலிருந்து என்னைப் பாதுகாத்துக் கொள்வதற்கு கட்சியையும், அரசாங்கத்தையும் நான் பயன்படுத்திக் கொள்கிறேனா, அல்லது அரசாங்கத்தையும் கட்சியையும் வெட்கத்திலிருந்து பாதுகாக்க நான் செயல்படுகிறேனா என்பதை அனைத்து பக்காத்தான் ஹாராப்பான் தலைவர்களும் கேட்க வேண்டிய கேள்வி” என அவர் தனது வலைப்பதிவில் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், இவை தமது தனிப்பட்ட  கருத்து என்பதை அவர் விளக்கியுள்ளார்.

பல்வேறு நிலைகளில் பிகேஆர் உறுப்பினர்கள் மற்றும் ஊடகங்களால் பகிரப்பட்ட காணொளி மற்றும் செய்திகள் குறித்து பிகேஆர் கட்சியின் உயர்மட்ட தலைவர்கள் அமைதி காத்து வருவதை அவர் மறைமுகமாக குறிப்பிட்டார்.

இந்த காணொளி மூலம் எடுக்கப்பட இருக்கும் நடவடிக்கை பக்காத்தான் ஹாராப்பானின் நம்பகத்தன்மையையும், வெளிப்படையான மற்றும் பொறுப்புணர்வுடன் இருப்பதையும் சோதித்துப் பார்ப்பதாக இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இந்த விவகாரத்தில் காவல் துறையினர் மீது நம்பிக்கையையும் மரியாதையையும் நிலைப்பெறச் செய்வதற்கு காவல் துறை தலைவரின் நடவடிக்கையும் இதில் விமர்சனத்திற்கு உள்ளாகும் நிலை ஏற்படும் என்றும் அவர் கூறினார்.