Home கலை உலகம் பிக்பாஸ் 2 – உலகநாயகனின் அசத்தல் புகைப்படங்கள்!

பிக்பாஸ் 2 – உலகநாயகனின் அசத்தல் புகைப்படங்கள்!

1242
0
SHARE
Ad

சென்னை – நாளை ஜூன் 17-ம் தேதி, ஞாயிற்றுக்கிழமை தொடங்கி, ஸ்டார் விஜயில், உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கவிருக்கும் ‘பிக்பாஸ் 2’ ஒளிபரப்பாகவிருக்கிறது.

கடந்த சீசனில் ஒரு நடிகராகவும், பொதுநலவாதியாகவும் மட்டுமே நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிய கமல், இந்த முறை மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியின் தலைவராகவும் புதிய வடிவம் எடுத்திருப்பதால், நிகழ்ச்சிக்கு மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகின்றது.

இதனிடையே, ‘பிக்பாஸ் 2’ சீசனில் கலந்து கொள்ளப் போகும் பிரபலங்கள் யார் யார்? என இன்னும் அதிகாரப்பூர்வமாகத் தெரியாத நிலையில், வெளிவந்திருக்கும் சில தகவல்களின் அடிப்படையில் நடிகை மும்தாஜ், ஜனனி ஐயர், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், தாடி பாலாஜி உள்ளிட்டோரின் பெயர்கள் கூறப்படுகின்றது.

#TamilSchoolmychoice

எனினும், பிரபலங்களின் அதிகாரப்பூர்வப் பட்டியல் இன்று வெளியாகலாம் அல்லது நாளை நிகழ்ச்சியின் போது நேரடியாக அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எது எப்படியோ? கடந்த சீசனில் குறும்படம், மருத்துவ முத்தம் என வார்த்தை ஜாலங்களால் அசத்திய உலகநாயகன் இந்த முறையும் வித்தியாசமாகத் தொகுத்து வழங்கி மக்களைக் கவர்ந்திழுப்பார் என்பதில் சந்தேகமில்லை.

இதனிடையே, பிக்பாஸ் 2 வீட்டில் கமல் இருக்கும் புகைப்படங்கள் நட்பு ஊடகங்களில் வெளியாகி தற்போது வைரலாகப் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.