Home உலகம் உலகக் கிண்ணம்: பிரான்ஸ் 2 – ஆஸ்திரேலியா 1

உலகக் கிண்ணம்: பிரான்ஸ் 2 – ஆஸ்திரேலியா 1

916
0
SHARE
Ad

மாஸ்கோ – நேற்று சனிக்கிழமை (ஜூன் 16) உலகக் கிண்ணக் காற்பந்து போட்டிகள் தொடரில் மொத்தம் நான்கு ஆட்டங்கள் நடைபெற்றன.

முதலாவதாக நடைபெற்ற ‘சி’ (C) பிரிவு ஆட்டத்தில் பிரான்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளுக்கிடையிலான ஆட்டம் பிரான்சுக்கு சாதகமாக முடிந்தது.

பிரான்ஸ் நாட்டின் விளையாட்டாளர் அந்தோய்ன் கிரிஸ்மான் தனக்குக் கிடைத்த பினால்டி வாய்ப்பை 58-வது நிமிடத்தில் கோலாக்கினார்.

#TamilSchoolmychoice

ஆஸ்திரேலியாவும் சிறப்பாக விளையாடி 62-வது நிமிடத்தில் கிடைத்த பினால்டி வாய்ப்பபை அதன் விளையாட்டாளர் மைல் ஜெடினாக் கோலாக்கினார்.

வலிமை வாய்ந்த குழுக்களில் ஒன்றாகக் கருதப்படும் பிரான்ஸ் இன்றைய ஆட்டத்தின் 81-வது நிமிடத்தில் தனது விளையாட்டாளர் பால் பொக்பா அடித்த மற்றொரு கோலைத் தொடர்ந்து 2-1 என்ற கோல் எண்ணிக்கையில் வெற்றியாளர் ஆனது.