Home One Line P1 கொவிட்19: புதிதாக 2,018 சம்பவங்கள் பதிவு, ஒருவர் மரணம்

கொவிட்19: புதிதாக 2,018 சம்பவங்கள் பதிவு, ஒருவர் மரணம்

435
0
SHARE
Ad

கோலாலம்பூர்: இன்று திங்கட்கிழமை வரையில், 24 மணி நேரத்தில் 2,018 புதிய கொவிட்-19 தொற்று சம்பவங்கள் நாடு முழுவதிலும் பதிவாகியிருக்கின்றன. நேற்று 1,340 ஆக இருந்த இந்த எண்ணிக்கை இன்று மீண்டும் உயர்ந்திருக்கின்றன.

உள்ளூரில் 2,011 தொற்று சம்பவங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், 7 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர்கள் மூலம் பெறப்பட்டதாகும்.

இதனைத் தொடர்ந்து மொத்தமாக நாட்டில் இதுவரையில் 95,327 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இன்று 1,084 பேர் குணமடைந்து மருத்துவமனைகளிலிருந்து வெளியேறி உள்ளனர். இதனைத் தொடர்ந்து, மொத்தமாக மருத்துவமனைகளில் இருந்து சிகிச்சை பெற்று வெளியேறியவர்களின் எண்ணிக்கை 78,393-ஆக உயர்ந்துள்ளது.

இன்னும், 16,496 பேர் தொற்றுக் காரணமாக மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் 109 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 55 பேருக்கு சுவாசக் கருவி உதவியோடு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இன்று ஒருவர் மரணமுற்ற நிலையில், மரண எண்ணிக்கை 438-ஆக உயர்ந்துள்ளது.

மாநிலம் வாரியாக தொற்றுகளின் எண்ணிக்கையில் சிலாங்கூரில் மட்டும் இன்று 1,204 சம்பவங்கள் பதிவாகி உள்ளன. சபா 247 தொற்றுகளைக் கொண்டிருக்கிறது. ஜோகூரில் 278 தொற்றுகள் பதிவாகி உள்ளன. கோலாலம்பூரில் 127 சம்பவங்கள் பதிவாகி உள்ளன.