Home One Line P2 பிக்பாஸ் 4 : ஜித்தன் ரமேஷ் – நிஷா வெளியேற்றப்பட்டனர்

பிக்பாஸ் 4 : ஜித்தன் ரமேஷ் – நிஷா வெளியேற்றப்பட்டனர்

1763
0
SHARE
Ad

சென்னை : தமிழகத்தின் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் 70 நாட்களைக் கடந்து தொடர்ந்து ஒளியேறிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் (4) தொடர்   நிகழ்ச்சியில் இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து இருவர் வெளியேற்றப்பட்டனர்.

நடிகரும் மற்றொரு நடிகர் ஜீவாவின் சகோதரருமான ஜித்தன் ரமேஷ், நடிகையும் மேடைப் பேச்சாளருமான நிஷா ஆகியோரே அந்த இருவராவர்.

கடந்த வாரத்தில் நடிகை சனம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

#TamilSchoolmychoice

இந்த வாரம் பிக் பாஸ் இல்லத்திலிருந்து வெளியேற்றப்பட 6 பேர் பரிந்துரைக்கப்பட்டிருந்தனர். ரமேஷ், நிஷா, ரம்யா பாண்டியன், ஷிவானி, சோம் சேகர், கேப்பிரியல்லா ஆகியோரே அந்த அறுவராவர்.

சனிக்கிழமை (டிசம்பர் 12) ஒளியேறிய நிகழ்ச்சியில் பரிந்துரைக்கப்பட்ட 6 பேர்களில் இருவர் இந்த வாரம் வெளியேற்றப்படவிருப்பதாக கமல்ஹாசன் அறிவித்தார். ஒருவர் அன்றே (சனிக்கிழமையே) வெளியேற்றப்படுவார் எனவும் அறிவித்தார்.

பின்னர் ஜித்தன் ரமேஷ், சோம் சேகர் இருவரில் ஒருவர் வெளியேற்றப்படுவதாகக் கூறிய கமல் அவர்கள் இருவரையும் இருவேறு தனித் தனி அறைகளுக்கு அனுப்பி வைத்தார். சற்று நேரத்தில் அவர்கள் இருவரில் ஜித்தன் ரமேஷ் வெளியேற்றபடுவதாக அறிவித்த கமல், அவரை நேரடியாக மேடைக்கு வரச் சொன்னார்.

சோம் சேகரை மீண்டும் தனியறையிலிருந்து பிக்பாஸ் இல்லத்தற்கு அனுப்பி வைத்தார்.

மேடையிலிருந்து ரமேஷ் மற்ற பிக்பாஸ் இல்ல பங்கேற்பாளர்களுடன் தொலைக்காட்சி வழி உரையாடினார்.

கமல் ரமேஷூடன் மேடையில் உரையாடி அவரது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டார்.

ஞாயிற்றுக்கிழமை வெளியேற்றப்பட்ட நிஷா

நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒளியேறிய நிகழ்ச்சியில் எஞ்சிய ஐவரில் ஒருவர் வெளியேற்றப்படுவதாக அறிவித்த கமல், நிஷா வெளியேற்றப்படுவதாக அறிவித்து அவரை மேடைக்கு அழைத்தார்.

மேடையில் அவரது பிக்பாஸ் இல்ல அனுபவங்களையும் கமல் நிஷாவிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். பின்னர் நிஷா மேடையில் இருந்தபடியே தொலைக்காட்சியின் வழி பிக்பாஸ் இல்லத்தில் எஞ்சியிருக்கும் 10 பங்கேற்பாளர்களுடன் உரையாடி விடைபெற்றுக் கொண்டார்.